80% விலை குறைப்பு, பிஎஸ்என்எல் அதிரடி சலுகை.!!

Written By:

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கனிசமாக அதிகரிக்க சேவைகளுக்கான கட்டணங்களை 80% வரை குறைக்க பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இதன் படி புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண குறைப்பு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது உள்கட்டமைப்புகளில் அதிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 80% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சலுகை

சலுகை

புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, புதிய கட்டமைப்புகளின் சேவையையும் அனுபவிக்க முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்திருக்கின்றார்.

குறைப்பு

குறைப்பு

புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகை முதல் இரு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

கட்டணம்

புதிய கனெக்ஷன் பெறும் வாடிக்கையாளர்கள் ஒரு நொடி ப்ளான் பெற ரூ.36க்கும், ஒரு நிமிட ப்ளான் பெற ரூ.37க்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

நிமிடம்

நிமிடம்

ரூ.37க்கு ரீசார்ஜ் செய்யும் போது பிஎஸ்என்எல் நம்பருக்கு அனைத்து லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ள நிமிடத்திற்கு 10 பைசாவும், மற்ற நெட்வர்க்களுடன் அழைப்புகளை மேற்கொள்ள ஒரு நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நொடி

நொடி

இதே போல் ரூ.36க்கு ரீசார்ஜ் செய்யும் போது பிஎஸ்என்எல் நம்பர்களுக்கு லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை மேற்கொள்ள மூன்று நொடிகளுக்கு 1 பைசாவும், மற்ற நெட்வர்க்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது மூன்று நொடிகளுக்கு 2 பைசா என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேவை

சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய பணிகளை மேற்கொள்ள ஏகிஸ் எனும் பிபிஓ நிறுவனம் கையாள இருப்பதோடு சமூக வலைதளங்களின் வாயிலாகவும் வாடிக்கையாளர் குறைகளை சரி செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Read here in Tamil why BSNL cuts mobile call rates by 80% for new customers.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot