Home
News

BSNL பயனர்களே மனச தேத்திக்கோங்க: முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையைக் குறைத்தது.!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு பிரபலமான திட்டத்தின் நன்மையை குறைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இப்போது நன்மைகளை குறைத்துள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இதுவும் ஒரு மறைமுக கட்டண உயர்வு தான். மேலும் இப்போத இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தின் புதிய நன்மைகள் என்னென்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்தது BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு தினசரி 5ஜிபி டேட்டாவை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இலவச BSNL ட்யூன்ஸ், ஜிங் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் வைத்துள்ள சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்தது BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.187 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.228 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்ததிட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்தது BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.239 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை குறைத்தது BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.269 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.269 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Cuts Benefits of Rs 599 Prepaid Plan: Full Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X