Home
News

செப்.9 க்கு முன்.. இதை செஞ்சிடுங்க.. BSNL கஸ்டமர்களுக்கு புதிய விதிமுறை.. ஆதார் கார்டு கட்டாயம்!

இந்தியா முழுவதும் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்ட நிலையில்.. அடுத்தது பிஎஸ்என்எல்-ன் 4ஜி அறிமுகம் (BSNL 4G Launch) தான் என்கிற பேச்சு ஏற்கனவே அடிபட தொடங்கிவிட்டது. இதற்கிடையில் பிஎஸ்என்எல், அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச 4ஜி சிம் மேம்படுத்தலை (Free 4G SIM Upgradation) அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது. இதன்கீழ் பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் பழைய சிம் கார்டுகளை 4ஜி சிம்களுக்கு (Old SIM Card into 4G SIM) மேம்படுத்த முடியும்.

செப்.9 க்கு முன் இதை செஞ்சிடுங்க.. BSNL கஸ்டமர்களுக்கு புதிய விதிமுறை!

இப்படி செய்வதால் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை அறிமுகமான வேகத்தில், 4ஜி சிம் கார்டுகளுக்கு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களால் உடனே அதிவேக 4ஜி நெட்வொர்க்கை (High Speed 4G Network) பயன்படுத்த முடியும். இதற்கிடையில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான புதிய விதிமுறை (New Digitalization Norm) ஒன்றை அறிவித்துள்ளது.

தி ஹிந்து வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, பிஎஸ்என்எல்-ன் ஆந்திர பிரதேச வட்டத்தின் (Andhra Pradesh Circle) டெலிகாம் முதன்மை பொது மேலாளர் ஆன ரவி குமார் புங்கா (Ravi Kumar Bunga), பேப்பர் அப்ளிகேஷன்கள் (Paper application) மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து சிம் கார்டுகளைப் பெற்ற பயனர்கள் அதை டிஜிட்டல் மயமாக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

இதை செய்வதற்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்கள் (BSNL Office) அல்லது பிஎஸ்என்எல் முகவர்களை (BSNL Agents) அணுகி, ஆதார் அட்டை (Aadhaar Card) வழியிலான கேஒய்சி செயல்முறையை (KYC Process) வருகிற 2023 செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு முன்னதாக முடித்து, உங்களுடைய பேப்பர் அப்ளிகேஷனை டிஜிட்டலைஸாக (Digitalise) ஆக மாற்றிக்கொள்ளவும் என்று ரவி குமார் புங்கா கூறியுள்ளார்.

வெளியான அறிக்கையின்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுமார் 9 லட்சம் வாடிக்கையாளர்கள் இன்னும் பிஎஸ்என்எல்-ன் 3ஜி சேவைகளையே (BSNL 3G Service) பயன்படுத்துகின்றனர். அந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே இப்போது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் 4ஜி சிம்மிற்கு அப்கிரேட் ஆகலாம்.

உடனே பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 2ஜி அல்லது 3ஜி சேவைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதா என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இப்போதைக்கு அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனென்றால் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் இன்னும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளையே நம்பி உள்ளனர். ஒருவேளை பிஎஸ்என்எல் 5ஜி பரவலான பிறகு 2ஜி, 3ஜி சேவைகள் முடிவுக்கு வரலாம்.

இருப்பினும், 4ஜி சிம் மேம்படுத்தல் முற்றிலும் இலவசம் என்பதால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சிம் கார்டுகளை மேம்படுத்தி கொள்வது (முன்னரே குறிப்பிட்டபடி) புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். அப்போது தான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியவுடன் அதிவேக நெட்வொர்க்குகளை உடனே அனுபவிக்க முடியும்.

பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம் இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கேட்டால்.. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆப்ரேட்டர் தற்போது நாட்டின் பல பகுதிகளில் உள்நாட்டு 4ஜி (Home-grown 4G) சேவையை அறிமுகப்படுத்துவதற்கு மிக அருகில் உள்ளது.

இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் கள சோதனைகளை (Field tests) நடத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாபில் பீட்டா முறையில் 4ஜி (4G Beta Mode) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பீட்டா சோதனையில் இருந்து வரும் தரவு / கருத்துகளிலிருந்து, பயனர்கள் தடையற்ற நெட்வொர்க் சேவைகளை பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை வெளியிட, டிசிஎஸ் (TCS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services), தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) மற்றும் சி-டாட் (C-DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றின் உதவியை பெறுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Customers Who Got SIM Card Through Paper Applications Need to Digitalise it Before September 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X