Home
News

BSNL வாடிக்கையாளர்களே., 670-க்கும் மேற்பட்ட லைவ் சேனலுடன் Bsnl tv- ஆனா அவங்களுக்கு மட்டும் தான்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு சலுகைகளை போட்டிப்போட்டு வழங்க தொடங்கியுள்ளன.

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

விலையை ஏற்ற முயற்சிப்பதாக தகவல்

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் உள்ள விரும்புவதாகவும் தெரிவித்தது.

BSNL STV 247 திட்டம்

BSNL STV 247 திட்டம்

இந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் 247 ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு சலுகையோடு கிடைக்கிறது. அதேபோல் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வசதியும் கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தில் இருந்து கூடுதல் சலுகை

முந்தைய திட்டத்தில் இருந்து கூடுதல் சலுகை

தற்போது புதிதாக தொடங்கப்பட்ட திட்டமானது ரூ .186 / ரூ .187 திட்டங்களை போன்றே நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் கூடுதல் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.187 திட்டமானது ஒர நாளுக்கு 3 ஜிபி டேட்டே எனவும் நாள் ஒன்று 250 நிமிட குரல் அழைப்பு என்ற வசதியோடு கிடைத்தது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கினாலும் இந்த திட்டமானது 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா

ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா

இந்த நிலையிலல் ரூ.247 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா தரவும், நாள் ஒன்று 250 நிமிட FUP வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் என்ற சலுகையோடு வெளியாகும் இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.1,999 வருடாந்திர திட்டம் பிஎஸ்என்எல்

ரூ.1,999 வருடாந்திர திட்டம் பிஎஸ்என்எல்

ரூ.1,999 வருடாந்திர திட்டம் புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் பிஎஸ்என்எல் ரூ.1,999 என்ற வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, தினமும் 250 நிமிட குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ்கள், பிஎஸ்என்எல் டிவி மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா போன்ற சேவைகளை வழங்கியது. இந்த திட்டம் 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. அதேபோல், இரண்டாவது விளம்பர சலுகையின் படி 60 நாட்கள் செல்லுபடியை வழங்கி 425 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் கிடைக்கிறது

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா

இந்த நிலையில் பிஎஸ்என்எல் ரூ.551 திட்டத்தில் தினசரி 5 ஜிபி டேட்டா சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.551-க்கு ரீசார்ஜ் செய்தால் பல்வேறு தினசரி 3 ஜிபி டேட்டா உபயோகிக்கலாம். இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி

ரூ.551-க்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கினாலும். இதில் சிறு குறைபாடு உள்ளது என்றே கூறலாம். அது இந்த திட்டத்தில் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த முடியாது. இணையதள பயன்பாட்டாளர்கள் இது பல நன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல் டிவி சலுகை

பி.எஸ்.என்.எல் டிவி சலுகை

இந்த நிலையில், எஸ்.எஸ்.டி.வி 97, எஸ்.டி.வி 365, எஸ்.டி.வி 399, எஸ்.டி.வி 997, எஸ்.டி.வி 998 மற்றும் எஸ்.டி.வி 1999 ஆகியவற்றுடன் பி.எஸ்.என்.எல் டிவி சலுகை கிடைக்கிறது. 670-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் வசதியும் கிடைக்கிறது.

 போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இல்லை

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இல்லை

ஆனால் இந்த சலுகையானது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சலுகையானது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

பல்வேறு லைவ் டிவி ஆப்ஷன்கள்

பல்வேறு லைவ் டிவி ஆப்ஷன்கள்

இந்த டிவி சலுகையில் பல்வேறு லைவ் டிவி ஆப்ஷன்கள் கிடைத்தாலும், ஆங்கில தொலைக் காட்சி பட்டியல் ஏதும் அறிவிக்கவில்லை. பிஎஸ்என்எல் டிவியானது 2.1 எம்பி பயன்பாடாகும், இது கூகிள் பிளே ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும்.
இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு, தங்களின் ரீசார்ஜ் திட்டம் மேலே வழங்கப்பட்டவைகளுள் இருந்தால் தங்களின் எண்ணுக்கு ஓடிபி வரும். பிறகு தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த தொடங்கலாம்.

Best Mobiles in India

English summary
BSNL customers now can get BSNL TV subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X