Home
News

அந்த மனசு இருக்கே.. மாசத்துக்கு ரூ.125-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24 ஜிபி டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் ஒரு வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. மாதத்துக்கு ரூ.125 செலவில் வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுத்து இருக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டாவும் இருக்கிறது. அதே நேரத்தில் எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இது கிட்டத்தட்ட வாய்ஸ் ஒன்லி திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், லம்ப்-சம் டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களை கொடுத்து மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டுள்ளது. அதாவது, மற்ற நிறுவனங்களிலும் லம்ப்-சம் டேட்டாவுடன் மலிவு விலைக்கு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்படாது.

அந்த மனசு இருக்கே.. மாசத்துக்கு ரூ.125-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஆனால், இதில் வழக்கம்போலவே தினசரிக்கு எஸ்எம்எஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் கிடைக்கும் லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா மூலம் குறைவாக வேகத்தில் வருடம் முழுவதும் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி மற்ற நிறுவனங்களில் கிடைக்காத சலுகைகளை இந்த திட்டம் கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த 28 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், உங்களுக்கு ரூ.125 மட்டுமே தேவைப்படுகிறது. இது மிகவும் மலிவான விலையாகும்.

இப்போது சலுகைகளுக்கு வருவோம். இந்த 336 நாட்கள் முழுவதுக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்ய முடிகிறது.

இதில் லம்ப்-சம் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடையாது, தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். அதுவும் 336 நாட்களுக்கும் இந்த 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு அனுப்ப கிடைக்கின்றன. இதற்கு அடுத்து டேட்டா சலுகை இருக்கிறது. இது லம்ப்-சம் சலுகையில் மட்டுமே கிடைக்கிறது. மொத்தமாக 24 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.

இந்த போஸ்ட் டேட்டாவை 24 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று முக்கிய சலுகைகளை மட்டுமே இந்த திட்டம் கொடுக்கிறது. இது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பக்கா தேர்வாக இருக்கும். இல்லை, கொஞ்சம் டேட்டா வேண்டுமானால் மற்றொரு ஆப்ஷன் உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இது அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் 330 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகை முந்தைய திட்டத்தைவிட அதிகமாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை இதில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த டேட்டா மற்றும் வேலிடிட்டியை தவிர மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கிறது. ஆகவே, தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களையும் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Customers Can Recharge With An Annual Plan for Rs 125 Per Monthly Cost Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X