ஏர்டெல் - ஜியோவை "வச்சி செய்யும்" பிஎஸ்என்எல்-ன் ரூ.499/- அறிமுகம்.!

அதன் ரூ 399/- என்கிற பட்ஜெட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இந்த தொலைதொடர்பு நிறுவனம் மீண்டும் ரூ.499/- என்கிற மற்றொரு போஸ்ட்பாய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

|

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் சமீப காலங்களில், குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து போஸ்ட்பெயிட் திட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறது அதன் ரூ 399/- என்கிற பட்ஜெட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, இந்த தொலைதொடர்பு நிறுவனம் மீண்டும் ரூ.499/- என்கிற மற்றொரு போஸ்ட்பாய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏர்டெல் - ஜியோவை

இந்திய டெலிகாம் துறைக்குள் நிலவும் போட்டிகளுடன் (ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற திட்டங்களுடன்) ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் ரூ.499/- ஆனது சற்று சிறந்த நன்மைகளை வழங்குகிறது என்றே கூறலாம்.

வரம்பற்ற குரல் அழைப்பு.!

வரம்பற்ற குரல் அழைப்பு.!

இந்த திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், எந்த தினசரி அல்லது மாதாந்திர வரம்பும் இல்லாத ரோமிங் உட்பட எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற குரல் அழைப்புகளை அனுபவிக்கலாம்.

45 ஜிபி அளவிலான டேட்டா.!

45 ஜிபி அளவிலான டேட்டா.!

வாய்ஸ் நன்மைகளை தவிர, இந்த திட்டத்தின்கீழ் மொத்தம் 45 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இது மற்ற டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு இணையாக கிடைக்குமொரு நன்மையாகும்.

கவரேஜ் பயனர்களுக்கு நல்ல திட்டமாக அமையும்

கவரேஜ் பயனர்களுக்கு நல்ல திட்டமாக அமையும்

நிறுவனத்தின் கவரேஜ் பயனர்களுக்கு நல்ல திட்டமாக அமைந்துள்ள இந்த ரூ,499/- என்பது, ஜிஎஸ்டி சேர்க்காத விலை நிர்ணயம் என்பதும், மேலும் இந்த திட்டத்தின்கீழ் பயன்படுத்தாத டேட்டாவை ரோல்ஓவர் செய்யும் விருப்பம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

60% தள்ளுபடி.!

60% தள்ளுபடி.!

முன்னதாக பிஎஸ்என்எல் அதன் லூட் லோ ஆபர் என்று அழைக்கப்படும் வாய்ப்பின்கீழ் ஒரு நம்பமுடியாத 60% சலுகையை வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியான அறிக்கையின்படி இந்த லூட் லோ வாய்ப்பானது மார்ச் 6, 2018 முதல் தொடங்கி மார்ச் 31, 2018 வரை மட்டுமே அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு, ரூ.1525/- மீதான 12 மாத கால அட்வான்ஸ் ரெண்டல் வாய்ப்பை பெற ஒரு வாடிக்கையாளர் விரும்பினால் 60% தள்ளுபடி கிடைக்கும், ஒருவேளை ஆறு மாதங்களுக்கு விரும்பினால் 45% தள்ளுபடியும் மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையெனில் 30% தள்ளுபடியும் கிடைக்கும்.

இதே முறையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.!

இதே முறையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.!

நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.1525/- ஆனது எந்த வரம்பும் இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பு இல்லாத தரவு ஆகியவைகளை வழங்குகிறது. ரூ.1525/- போன்றே வரம்பற்ற நன்மைகளை வழங்கும் ரூ.1125, ரூ.799, ரூ.725, ரூ.525, ரூ.325/- மற்றும் ரூ.225/- ஆகிய திட்டங்களிலும் இதே முறையிலான தள்ளுபடிகளை பெற முடியும்.

அட்வான்ஸ்டு ரெண்டல் விருப்பங்கள் கீழ் மட்டுமே பெற முடியும்.!

அட்வான்ஸ்டு ரெண்டல் விருப்பங்கள் கீழ் மட்டுமே பெற முடியும்.!

இந்த வாய்ப்பின் கீழ் பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் திட்டங்களின் மீது 60% தள்ளுபடி கிடைக்கும். உடன் 100% இலவச செயல்படுத்தல் கட்டணங்கள் மற்றும் ஒரு இலவச சிம் அட்டையும் கிடைக்கும். எனினும், இந்த வாய்ப்பை 12 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் போன்ற அட்வான்ஸ்டு ரெண்டல் விருப்பங்கள் கீழ் மட்டுமே பெற முடியும்.

கவர்ச்சிகரமான திட்டங்களை சமாளிக்கும் வண்ணம்.!

கவர்ச்சிகரமான திட்டங்களை சமாளிக்கும் வண்ணம்.!

இதே மாதிரியான பிஎஸ்என்எல் லூட் லோ வாய்ப்பானது கடந்த நவம்பர் 2017-ல் கிடைத்ததும், சமீப காலமாக தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை சமாளிக்கும் வண்ணம் மீண்டும் இந்த பாணி கையில் எடுக்கப்பட்டுள்ளதும் வெளிப்படை இந்த வாய்ப்பின் சிறந்த பகுதி என்னவென்றால் இது ஏற்கனவே இருக்கும் பிஎன்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், அதே சமயம் பான்-இந்தியா அடிப்படையிலான பயணர்களுக்கும் பொருந்தும்.

30ஜிபி

30ஜிபி

முன்னர் அறிமுகமான பிஎஸ்என்எல் ரூ.399/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், இது எந்த வரம்பும் இல்லாத அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து அதன் பில்லிங் சுழற்சி காலத்திற்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. துரதிருஷ்டவசமாக, இந்தத் திட்டம் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கவில்லை, இதுவொரு பின்னடைவாக இருப்பினும் கூட இந்த ரூ.399 திட்டமானது இதர தனியார் தொலைதொடர்புகள் வழங்கும் டேட்டா நன்மையானது 50% அதிகமாகும்.

ஏர்டெல்

ஏர்டெல்

இந்த திட்டமானது இது எந்த ரோமிங் அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்பது மற்றொரு பின்னடைவு ஆகும். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் ரூ.399/- ஆனது மொத்தம் 20 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் பில்லிங் சுழற்சி காலம் வரை ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

வோடபோன், ஐடியா

வோடபோன், ஐடியா

வோடபோன் இந்தியாவின் ரூ.399/- ஆனது ஒரு ரெட் பேஸிக் திட்டமாகும். இது வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் மொத்தம் 20 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ஐடியா செல்லுலாரின் ரூ.389/- என்கிற நிர்வாணா பட்ஜெட் திட்டமானது - சமீபத்தில் திருத்தப்பட்டு - தற்போது மொத்தம் 20 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

How to check PF Balance in online (TAMIL)
குறைந்தபட்சம்.!?

குறைந்தபட்சம்.!?

பிஎஸ்என்எல் ரூ.399/- திட்டத்துடன் குறைந்தபட்சம் எஸ்எம்எஸ் நன்மைகளாவது சேர்க்கப்பட்டால் இதர நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்குமொரு முதன்மை திட்டமான இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பல வகையான டெலிகாம் அப்டேட்ஸ்களுக் குதமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Coming Forward With Rs 499 Postpaid Plan Offering 45GB Data, Unlimited Callsg, Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X