Home
News

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-கீழ் வழங்கும் திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ,ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்யவண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். சமீபத்தில் ஜியோ உள்ளிட்ட சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.100-க்கும் கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை அகற்றின.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

குறிப்பாக இதுபோன்ற சிறிய சிறிய திட்டங்கள் அதிகளவு வருவாயை கொடுப்பதில்லை என்றும், எனவே ரூ.100-க்கும் அதிமான திட்டங்களில் ஜியோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் அதிகளவு கவனம் செலுத்திவருகிறது. இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-க்கும் கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து இன்று வரை சிறப்பான சலுகைகளை வழங்கிவருகிறது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100-க்கு கீழ் வழங்கும் சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ .9 ப்ரீபெய்ட் ஃப்ரீடம் சோட்டா திட்டம்:

ரூ .9 ப்ரீபெய்ட் ஃப்ரீடம் சோட்டா திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ .9 ப்ரீபெய்ட் ஃப்ரீடம் சோட்டா திட்டம் ஆனது 250 நிமிட குரல் அழைப்புகள், 100 எம்பி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஒரு நாளைக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ .29  ஃப்ரீடம் சோட்டா திட்டம்

ரூ .29 ஃப்ரீடம் சோட்டா திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ .29 ஃப்ரீடம் சோட்டா திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி 3ஜி/2ஜி டேட்டா நன்மையை ஒரு வாரத்திற்கு வருகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் நீங்கள் ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து ஏழு நாட்கள் செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ரூ.69-ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.69-ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறவனம் வழங்கும் ரூ.69-ப்ரீபெய்ட் திட்டம் எஸ்.டி.வி.யைக் கொண்டுள்ளது, அதன்படி இந்த திட்டமானது 15நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வருகிறது. அதன்படி இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் (மீண்டும் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற வரம்புடன்), 2ஜிபி டேட்டா மற்றும் 500எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் 15நாட்களுக்கு கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.89-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.89-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.89-ப்ரீபெய்ட் திட்டமானது 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, குறிப்பாக இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 15நாட்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.69-ப்ரீபெய்ட்-திட்டத்தில்உள்ள அனைத்து சலுகைகளும் கிடைக்கும்,கூடுதலாக 10ஜிபி டேட்டா மட்டும் இந்த திட்டத்தில் அதிகமாக கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.99-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99-ப்ரீபெய்ட் திட்டமானது எஸ்எம்எஸ் மற்றும் தரவு சலுகைகளை வழங்காது, அதற்குபதிலாக இது ஒரு நாளைக்கு 250 நிமிடங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை 22 நாட்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Combo Plan: 10GB Data and Unlimited Voice Calling for less than Rs 100 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X