BSNL-க்கு மாறிடீங்களா.. இனிமே 336 நாட்கள் வேலிடிட்டி.. வெறும் ரூ.124 மாத செலவில்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு மாறிய கஸ்டமர்கள் குளிரும்படி அடிமட்ட விலையில் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகையை கிடைத்து இருக்கிறது. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கொடுக்காத விலையில் இந்த திட்டத்தை கொடுத்து கஸ்டமர்களை வியக்கவைத்துள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தீபாவளிக்கு பிறகு படிப்படியாக கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவைகள் கிடைக்க தொடங்கிவிட்டன. இவர்களுக்கு பிஎஸ்என்எல் கொடுக்கும் திட்டங்கள் மற்ற நிறுவனங்கள் கனவிலும் கொடுக்க முடியாதபடி அடிமட்ட விலையில் இருக்கின்றன. இதில் ரூ.1499 திட்டம் மூக்கில் விரல்வைக்க செய்கிறது.

பிஎஸ்என்எல் மலிவான வருடாந்திர திட்டம் ரூ 1499 (BSNL Cheapest Yearly Plan Rs 1499): இந்த பிஎஸ்என்எல் ஒரு வருட திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் டேட்டா (Data) சலுகைகள் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் (SMS) சலுகையும் கிடைக்கிறது. வாய்ஸ் கால்களை போல டேட்டாவானது அன்லிமிடெட் சலுகையாக கிடைக்காது. தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும்படி கிடைக்கிறது.
அதாவது, இந்த 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களில் எந்தவித குறையும் இல்லை. வருடம் முழுவதும் அன்லிமிடெட் சலுகையாக கொடுக்கப்படுகிறது. ஆனால், டேட்டா சலுகை 24 ஜிபியாக மட்டுமே கிடைக்கிறது. அதாவது, 336 நாட்களுக்கும் மாதம் 2 ஜிபி வீதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, 24 ஜிபிக்கு மேல் டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் சிம் ஆக்டிவ் தொடர்ந்து கஸ்டமர்களுக்கு கிடைக்கும். சொல்லப்போனால், மாதத்துக்கு ரூ.124 மதிப்பில் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைத்தால், இது மிகவும் லாபமான திட்டம் என்பதை மறுக்க முடியாது. இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது.
இந்த சலுகையானது மற்ற திட்டங்களை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களாக கிடைக்கிறது. இப்படி மூன்று சலுகைகளும் அடிமட்ட விலைக்கு களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல அடிமட்ட விலையில் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், டேட்டா அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், ரூ.1000 பட்ஜெட்டுக்குள் திட்டம் வேண்டுமானால், ஒரு திட்டம் இருக்கிறது.
பிஎஸ்என்எல் 160 நாட்கள் திட்டம் (BSNL 160 Days Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போல் கிடையாது. இதில் டேட்டா சலுகை பட்டையை கிளப்புகிறது. அதாவது, 160 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல 2 ஜிபிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் டேட்டாவும் வருகிறது.
ஆகவே, டேட்டாவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்க போவதில்லை. அதேபோல வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் சலுகையாக கிடைக்கின்றன. வருடம் முழுவதும் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல 100 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்திலும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த மூன்று சலுகைக்களுக்கு மேலும் சலுகைகள் வருகிறது.
ஆகவே, லிஸ்டன் பாட்காஸ்ட், ஜிங்க் மியூசிக் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) சலுகைகளை பெற முடியும். மேலும், ஹார்டி கேம்ஸ், சேலன்ஜர் அரினா கேம்ஸ், கேம் ஆன் அஸ்ட்ரோடெல் சலுகைகளை பயன்படுத்த முடியும். இப்படி பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனமும் வைத்திருக்கிறது. நாடு முழுவதும் 4ஜி கிடைத்த பிறகு கஸ்டமர்களுக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications








