BSNL-ன் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்.. 50 நாட்கள் வரை வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. இதோ பட்டியல்..
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை படிப்படியாக நீக்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இதுவரை தனது மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, குறைந்த பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு பிஎஸ்என்எல் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 99 Prepaid Plan) ஆனது மொத்தமாக 50எம்பி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 147 Prepaid Plan) ஆனது மொத்தமாக 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் 5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.153 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 153 Prepaid Plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.
இந்த பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். அதுவும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 228 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்கும். 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல்ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications