Jio-வுக்கு BSNL சவால்.. 365 நாள் தினமும் 3GB டேட்டா.. முடிஞ்சா இந்த விலைக்கு கொடுத்து பாரு.. குவியும் மக்கள்..
இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட முன்னணி டெலிகாம் நிறுவனமான (India's leading telecom industries) ஜியோ (Jio) நிறுவனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக, முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான டெலிகாம் நிறுவனத்தின் கடுமையான விலை ஏற்றம் கூறப்படுகிறது. ஜியோ மட்டுமின்றி, ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களும் அதன் விலையை அதிகரித்ததனால் மக்கள் இப்போது அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பக்கம் தாவ துவங்கியுள்ளனர்.
இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒரு பொருட்டாக நினைக்காத மக்கள் இப்போது, பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தான் நியாயமான டெலிகாம் நிறுவனம், மக்களுக்கான மலிவு நிறுவனம் என்று இரண்டே வாரங்களில் புகழ்ந்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களை மட்டுமே நாடி இருந்த மக்கள் இப்போது, அரசு நடத்தும் பிஎஸ்என்எல் பக்கம் மாற துவங்கியுள்ளனர்.

ஜியோவுக்கே சவால் விடும் பிஎஸ்என்எல் இன் 1 வருட நீண்ட கால திட்டம்:
கடந்த 23 நாட்களுக்குள் மட்டும், பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை தனது நெட்வொர்க்கின் கீழ் சேர்த்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை இப்போது பிஎஸ்என்எல் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து வருகிறது. இந்த ஈர்ப்பின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை மிக மிக மலிவு விலையில் வழங்கி வருகிறது.
ஜியோ நிறுவனத்திற்கு சவால் விடும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 1 வருட நீண்ட கால திட்டங்களை இந்தியாவில் விளம்பரம் செய்து வருகிறது. இதில் பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டம் மற்றும் பிஎஸ்என்எல் ரூ.2999 திட்டம் போன்ற திட்டங்களை நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது. இத்துடன் ஒப்பிடுகையில், ஜியோவின் வருடாந்திர திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்த திட்டங்களாக திகழ்கின்றன.
ஜியோ நிறுவனம் ரூ.3599 மற்றும் ரூ.3999 என்ற விலையில் இரண்டு திட்டங்களை வழங்குகிறது. BSNL-ன் வருடாந்திர திட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஜியோ திட்டங்கள் ரூ.1000 மற்றும் ரூ.2000 வரை விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. பிஎஸ்என்எல் பக்கம் மாறும் மக்கள் நீண்ட கால திட்டங்களை தேர்வு செய்கின்றனர். காரணம், இவை மாதாந்திர திட்டங்கள், 3 மாத திட்டங்கள் மற்றும் அரையாண்டு திட்டங்கள் உடன் ஒப்பிடுகையில் மகத்தான நன்மைகளை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 1,999 திட்டம் (BSNL Rs 1999 Plan):
இந்த திட்டம் ரூ.1999 விலையில் 600GB டேட்டா நன்மையை கொடுக்கிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை இந்த திட்டம் வழங்குகிறது. இத்துடன், ஜிங்க் மியூசிக் மற்றும் வாவ் என்டர்டெயின்மென்ட் சந்தா போன்ற இலவச நன்மைகளும் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 365 நாள் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ. 2,999 திட்டம் (BSNL Rs 2999 Plan):
இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 365 நாட்களாகும்.


Click it and Unblock the Notifications








