பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்: ஜனவரி 31-ம் தேதி வரை இலவச 2.2ஜிபி டேட்டா.!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் சில நாட்களுக்கு பம்பர் ஆஃபர் எனும் பெயரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு
கூடுததலாக 2.2ஜிபி இலவச டேட்டா அறிவித்தது.

இந்த பம்பர் ஆஃபர் முடிவுக்கு வரும் என இருந்த நிலையில் இந்நிறுவனம் வரும் (2019) ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த நிறுவனத்தின் இணையவேகம் மற்றும் சற்று குறைவாக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள 2.2ஜிபி கூடுதலான டேட்டா சலுகை ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999 திட்டங்களில் வழங்கப்படுகிறது. பின்பு ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444, ரூ.448 திட்டங்களில் கூட இந்த கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும்.

பிராட்பேன்ட் சேவை
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் பிராட்பேன்ட் சேவை கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது, குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ரூ.777 மற்றும் ரூ.1,277 விலையில் விளம்பர சலுகையை அறிவித்தது. குறிப்பாக இந்த திட்டம் ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

750ஜிபி&500ஜிபி
பிஸ்எஸ்என்எல் அறிவித்துள்ள பிராட்பேன்ட் சேவை ரூ.777 திட்டம் பொறுத்தவரை 30நாட்களுக்கு 500ஜிபி டேட்டா 50எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1277 திட்டத்தில் பயனர்களுக்கு 750ஜிபி டேட்டா 10எம்பிபிஎஸ் வேகத்தில் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications