பட்ஜெட்ல சூப்பர் ஸ்டார் பிளான்.. ரூ.400 விட கம்மி விலையில் BSNL தரும் 150 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்போது 150 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL 150 days validity plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இப்போது சிறந்த மலிவு விலை திட்டமாக வெறும் ரூ. 397 விலையில் புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 397 Plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? ஏன் இந்த திட்டம் பட்ஜெட்டில் மிக சிறந்த விருப்பமாக திகழ்கிறது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மிக மிக குறைந்த விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க துவங்கியுள்ளது. அந்த வரிசையில், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இப்போது இந்தியாவில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு 400 ரூபாய் விலைக்குள் 150 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்க துவங்கியுள்ளது.

பட்ஜெட்ல சூப்பர் ஸ்டார் பிளான்.. ரூ.400 விட கம்மி விலையில் BSNL தரும் 150 நாள் வேலிடிட்டி:
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் மிகவும் மலிவான விலை விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம் தான் இந்த பிஎஸ்என்எல் ரூ. 397 ப்ரீபெய்ட் திட்டமாகும் (BSNL Rs 397 Prepaid Plan). இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் கூட இத்தகைய திட்டத்தை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 397 பிளான் (BSNL 397 Plan) இப்போது 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது 400 ரூபாய் விலைக்குள் இந்த திட்டம் 5 மாதம் செல்லுபடியாகும் நீண்ட வேலிடிட்டியை (BSNL 5 months validity plan) மலிவு விலையில் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்கள் சிம் கார்டை நீங்கள் 5 மாத காலத்திற்கு எந்தவித கூடுதல் செலவுமின்றி ஆக்டிவேட் நிலையில் வைக்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 397 ப்ரீபெய்ட் திட்டமாகும் (BSNL Rs 397 Prepaid Plan):
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாமா? பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த BSNL Rs 397 Plan கீழ், அதன் பயனருக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (voice calls), டேட்டா (data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் ஒரு அடிமட்ட விலை திட்டம் என்பதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் இதன் நன்மையில் சில வரையறையை வழங்கியுள்ளது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் வாய்ஸ் கால் நன்மையானது, நீங்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்த முதல் 30 நாட்களுக்கு, எந்தவித தடையுமின்றி கிடைக்கும் (BSNL 30 days benefits) என்று BSNL அறிவித்துள்ளது. அதேபோல், இந்த திட்டத்தின் முதல் 30 நாள் செல்லுபடியின் பொழுது, உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. இத்துடன் 30 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் BSNL வழங்குகிறது.
பிஎஸ்என்எல் பட்ஜெட் சூப்பர் ஸ்டார் ப்ரீபெய்ட் பிளான் (BSNL Budget Super Star Plan):
இருப்பினும், இந்த திட்டம் மொத்தமாக 150 நாட்களுக்கு உங்கள் சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைப்பதோடு, 150 நாட்களுக்கு இலவச இன்கம்மிங் அழைப்பு சேவையையும் வழங்குகிறது. மலிவு விலையில் சிறந்த தேர்வாக ஒரு ப்ரீபெய்ட் பிளானை தேடும் நபர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். உண்மையயை சொல்ல போனால், பட்ஜெட்டில் இந்த திட்டம் ஒரு சூப்பர் ஸ்டார் ப்ரீபெய்ட் பிளானாக (BSNL super star plan) திகழ்கிறது.


Click it and Unblock the Notifications