அலெர்ட்.. இனி ரூ.449க்கு 3300GB டேட்டா! பெரிய சலுகை அறிவித்த BSNL.. பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய திட்டம்!
இந்தியாவில் பிராட்பேண்ட் (Broadband) சேவைகளில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் (BSNL) தனது பயனர்களுக்காக ஒரு புதிய மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் ஃபைபர் பேசிக் நியோ ரூ.449 (Fiber Basic Neo Rs.449) திட்டத்தை களமிறக்கியுள்ளது. குறைந்த செலவில் நல்ல வேகத்துடன் இன்டர்நெட்டை பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு 50 Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இது தினசரி பயன்பாடுகள், ஆன்லைன் வகுப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங், மற்றும் வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும். மேலும், இந்த திட்டத்தில் மாதத்திற்கு 3300 ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது. இது சாதாரண குடும்ப பயன்பாட்டிற்கு மிக அதிகமாகும்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, 3300 ஜிபி டேட்டா முடிந்த பிறகும் இணைய சேவை முற்றிலும் நிறுத்தப்படாது. அதற்கு பதிலாக, இணைய வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும். இதனால், அவசர தேவைகளுக்கு இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதால் பயனர்களுக்கு இது ஒரு கூடுதல் நன்மையாகும். மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (unlimited voice calls) வசதியும் வழங்கப்படுகிறது.
இதனால், இணையத்துடன் சேர்த்து வாய்ஸ் கால்களையும் கூடுதல் செலவு இல்லாமல் பயன்படுத்த முடியும். தற்போது, பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.449 திட்டம், தனியார் நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் நிலையான சேவையை விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.
இந்த திட்டத்தை பெற விரும்பும் பயனர்கள், பிஎஸ்என்எல் வழங்கியுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) எண் 1800 4444 மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு இணைப்பை பதிவு செய்யலாம்.
மொத்தத்தில், குறைந்த செலவில் அதிக பயன்களை வழங்கும் இந்த புதிய திட்டம், பிராட்பேண்ட் பயனர்களிடையே விரைவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அதிக வேகமும் ஓடிடி வசதிகளும் விரும்பும் பயனர்களுக்காக பிஎஸ்என்எல் தனது சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் ஓடிடி ரூ.999 (Super Star Premium Plus OTT Rs.999) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபைபர் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
• 200 Mbps வரை ஹை ஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கும்
• மாதத்திற்கு அதிகபட்சமாக 5000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்
• பல பல்வேறு ஓடிடி ஆப்களும் கிடைக்கும் (ZEE5, Hungama, SonyLIV, Disney+ Hotstar போன்றவை)
• அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் கொடுக்கப்படும்.
மேலும், 5000 ஜி பி டேட்டா முடிந்த பிறகு கூட இன்டர்நெட் அனுகல் தொடரும். ஆனால் வேகம் 10 Mbps ஆக குறையும். இந்த இரண்டு திட்டங்களும் வெவ்வேறு வகை பயனர்களை குறிவைத்து கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் பேசிக் இன்டர்நெட் வேண்டுமெனில் ரூ.449 திட்டம் சிறந்தது. அதே நேரத்தில், அதிக வேகம் மற்றும் என்டர்டெயின்மென்ட் தேவைகள் உள்ளவர்களுக்கு ரூ999 ஓடிடி திட்டம் ஒரு வேல்யூ ஃபார் மணி ஆப்சனாக ஆக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தையும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) எண் 1800 4444 மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் வழியாகவும் இந்த பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்களை (BSNL Fiber Plans) பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications