Home
News

BSNL:திடீரென 4மாதங்கள் வரை இலவச சேவையை அறிவித்த பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் உற்சாகம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தின் கீழ் தீயாய் வேலை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி வந்தபோதிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

6பைசா கேஷ்பேக்

6பைசா கேஷ்பேக்

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையின் பலன்களை பெறுவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம், ஏனெனில் ஐந்து நமிட அழைப்புகளை செய்ய 6பைசாவை கேஷ்பேக் ஆக வழங்குவது, பின்பு லேண்ட்லைன்
வழியான அழைப்புகளுக்கு கேஷ்பேக் கொடுப்பது போன்ற பிஎஸ்என்எல் பிராட்ணேட் நன்மைகள் மக்களுக்கு உற்சாகம் கொடுக்கிறது என்றே கூறலாம்.

இலவச சேவை நாட்கள்

இலவச சேவை நாட்கள்

குறிப்பிட்டு சொல்லவேண்டும என்றால், இலவச சேவை நாட்கள் போன்ற நன்மைகளை ஜியோ பைபரால் கூடவழங்க முடியாது. ஏனெனில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் வருடாந்திர இணைப்பு அல்லது அதிக
சந்தா காலத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்துகிறார்கள், இதன் மூலம் பிஎஸ்என்எல்-லிருந்து இலவசசேவை மாதங்களை பெறுகிறார்கள். இந்த சூப்பர் சலுகைகயின் கீழ் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு
4மாத கால ரென்டல் சலுகையை வழங்குகிறது. அதாவது உங்கள் சந்தா காலம் பொறுத்து இந்த சிறப்பு சலுகைகிடைக்கும்.

ஒரு மாதம் இலவச சேவை

ஒரு மாதம் இலவச சேவை

உதரணமாக பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் பிராட்பேண்ட் DSL, BharatFibre, BBoWi-Fi பிராட்பேண்ட் திட்டங்கள் அல்லது லேண்ட்லைன் 12மாதங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக 1மாதம் சேவை கிடைக்கும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் 12மாத சேவைக்குபணம் செலுத்துவதன் மூலம், பயனர்கள் 13மாத கால சேவையை பெறமுடியும்.

3மாதங்கள் இலவச சேவை

3மாதங்கள் இலவச சேவை

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் 24மாதங்கள் கொண்ட சந்தாவை தேர்வுசெய்தால்,அவர்களுக்கு கூடுதலாக 3மாத கால சேவை இலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 24மாதங்களுக்கு பணம் செலுத்தினால், சந்தாதாரர்களுகக்கு 27மாத
சேவை இலவசமாக கிடைக்கும்.

4மாதங்கள் இலவச சேவை

4மாதங்கள் இலவச சேவை

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் அல்லது பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் 36மாதங்கள் சந்தாவைதேர்வு செய்தால் கூடுதலாக 4மாதங்கள் இலவச சேவை கிடைக்கும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் 40மாதசேவையை நீங்கள் அனுபிவிக்க முடியும்.

கட்டணமில்லா எண்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சலுகையை பெற அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்திலிருந்து குறிப்பிட்ட பேனரைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது 18003451500 என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் அதைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL broadband users can enjoy 4 months for free: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X