Airtel, Jio-வை ஓடவிட்டு மிரட்டிய BSNL திட்டம்.! உடனே ரீசார்ஜ் செய்தால் நீங்க லக்கி.!
இந்தியாவை பொறுத்த வரையில், டாப் பெஸ்ட் தொலைத்தொடர்பு நிறுவனம் என்றால் அது ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்களாகத் தான் இருக்க முடியும். காரணம், இந்த 2 நிறுவனங்களுமே அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இதற்கான ஒரு முக்கிய காரணமே, இவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலை, நன்மைகள் மற்றும் இந்த நிறுவனங்கள் கொடுக்கும் தடையில்லா சர்வீஸ் தான்.

ஏர்டெல் மற்றும் ஜியோவை தூள் தூளாக்கிய BSNL திட்டம்.!
இப்படிப் புகழ்பெற்று, அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்த இந்த 2 முன்னணி நிறுவனங்களையும் அரசு சொந்தமான BSNL நிறுவனம் தெறித்து ஓடவிட்டுள்ளது. ஆம், குறிப்பாக ஒரே ஒரு புதிய ரீசார்ஜ் சலுகையின் மூலம், BSNL நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை தூள் தூளாக்கியுள்ளது. இங்கு நாம் பார்க்கப் போகும் BSNL ரீசார்ஜ் திட்டம் ஒரு பிராட்பேண்ட் திட்டமாகும்.

மிகக் குறைவான நேரமே உள்ளது.!
உண்மையிலேயே இது மிகவும் அதிக மதிப்பு நிறைந்த திட்டமாகும். இந்தியாவில் எந்தப் பகுதியிலும் நீங்கள் இப்படி ஒரு ஜியோ அல்லது ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தைப் பெற முடியாது. ஆனால், இந்த திட்டம் சில நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், நீங்கள் இதை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு மிகக் குறைவான நேரமே உள்ளது.

ஓவர் பில்ட் அப் இல்ல.. உண்மையாவே இது பெஸ்ட் பிஎஸ்என்எல் திட்டம் தான்.!
எது எப்படியாக இருந்தாலும், உங்கள் முடிவை விரைவாக எடுப்பது நல்லது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஒரு புதிய பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சலுகைகளை முற்றிலுமாக முறியடிக்கிறது. இது என்னப்பா ஓவர் பில்ட் அப் ஆக இருக்கிறது என்று நினைக்காதீர்கள். எந்த வகையிலும் இது மிகைப்படுத்தல் அல்ல.

இது எப்போதும் கிடைக்கும் திட்டம் அல்ல.. இதுவொரு குறுகிய கால சலுகை திட்டம்.!
நாங்கள் பேசும் திட்டத்தை நீங்களே பார்க்கும் போது விஷயம் உங்களுக்குத் தெளிவாகப் புரியும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரே விஷயம் என்னவென்றால், BSNL இன் இந்த திட்டம் நிறுவனத்தின் வழக்கமான சலுகை அல்ல. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் குறுகிய கால சலுகையாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.!
இந்தியாவில் வேறு எந்த இணையச் சேவை வழங்குநராலும் செய்ய முடியாத அனுபவத்தை, மலிவு விலையில் பயனர்களுக்கு இந்த திட்டம் இப்போது வழங்குகிறது. நாங்கள் பேசும் திட்டம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரச் சலுகையின் கீழ் வருகிறது. இது நவம்பர் 15, 2022 அன்று வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்த பிஎஸ்என்எல் திட்டதின் விலை என்ன?
சரியாக, இன்னும் ஒரு வார காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கப் போகிறது. அதற்குப் பின்னர் இந்த சலுகை பட்டியலில் இருந்து அகற்றப்படும். நீங்கள் விரும்பினால், அதற்கு முன் திட்டத்தில் குழு சேரலாம். நாங்கள் பேசும் பிஎஸ்என்எல் திட்டம் ரூ.775 விலையில் வருகிறது. இது மாதாந்திர திட்டம் அல்ல, நீங்கள் இதை வாங்கும் போது, BSNL Bharat Fiber இலிருந்து 75 நாட்களுக்குச் சேவைகளைப் பெறுவீர்கள்.

இந்த BSNL திட்டத்தில் 2TB டேட்டாவா?
இது ஒரு விளம்பர சலுகையாகும். இது பயனர்களுக்கு 2TB மாதாந்திர டேட்டா இடுகையை வழங்குகிறது. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், 2TB டேட்டாவை இந்த திட்டம் இப்போது உங்களுக்கு வழங்குகிறது. டேட்டா வரம்பிற்குப் பிறகு இணைய வேகம் 10 Mbps ஆகக் குறையும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையில், இந்த விலையில் 2TB டேட்டா கிடைப்பது ஸ்பெஷல் ஆனா விஷயம் தான்.

யாருக்குமே கிடைக்காதா OTT பெனிபிட்ஸ்.!
இதுமட்டுமில்லை, இந்த திட்டத்துடன் உங்களுக்கு ஏராளமான OTT நன்மைகளை வழங்குகிறது. BSNL இன் இந்த இணையத் திட்டமானது 8+ OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது. இதில் SonyLIV, ZEE5, Voot, Hungama, Shemaroo, Lionsgate, Disney+ Hotstar மற்றும் Yupp TV போன்ற OTT இயங்குதளங்களுக்கான இலவச சந்தாவை இத்திட்டம் வழங்குகிறது. இப்படி அதிகமான நன்மைகள் கிடைக்கும் ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.


Click it and Unblock the Notifications