ரூ.200/-ல் இருந்து ரூ.20/-க்கு சரிந்த பிஎஸ்என்எல்; கொஞ்சம் நஞ்சமா ஆடுனீங்க?

அரசங்கதிற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளது போல்

|

அரசங்கதிற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) மிக வேகமாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

ரூ.200ல் இருந்து ரூ.20க்கு வந்த பிஎஸ்என்எல்; கொஞ்சம் நஞ்சமா ஆடுனீங்க?

இந்தியாவில் 3ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியதில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200/-க்கு அதன் சிம் கார்டை விற்பனை செய்தது. இப்போது, டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான கட்டண யுத்தம் மற்றும் நாடு முழுவதும் மிக வேகமான பரவி வரும் 4ஜி தொழில்நுட்பத்தின் விளைவாக, வெறும் ரூ.20/-க்கு 4ஜி பிஎஸ்என்எல் சிம் கார்டை விற்பனை செய்து வருகிறது.

அதாவது முந்தைய 3ஜி சிம் கார்டின் விலையில் 10% விலைக்கு 4ஜி சிம் கார்டை விற்கிறது. சமீப காலமாக பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி அனுபவத்தை வழங்குவதற்காக தனது 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தென் மண்டலங்களில் 10,000-க்கும் 4ஜி eNode-B-களை நிறுவ, பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைக்கு மாறி, புதிய 4ஜி நெட்வொர்க்கின் முழு நன்மைகளைப் பெற விரும்பும் புதிய 4ஜி யூஎஸ்ஐஎம் சந்தாதாரர்கள் ஒரு 4ஜி சிம் கார்டை வாங்க வேண்டும். 4ஜி சேவைக்குள் நுழைந்த பின்னர் நிறுவனத்தின் பழைய 2ஜி / 3ஜி சேவைகளை 4ஜி சிம் மூலம் அணுகமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4ஜி சிம் விற்பனையானது, ஒருவழியாக பிஎஸ்என்எல்-ன் போராட்டம் மிகுந்த நாட்கள் முடிவுக்கு வந்து விட்டது என்பதை வெளிப்படுத்துகின்றன.

Best Mobiles in India

English summary
BSNL Brings New Rs 20 USIM for 4G Network. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X