Home
News

பிஎஸ்என்எல் ரூ.395-திட்டத்தில் நன்மைகள் குறைப்பு.! வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் எஸ்.டி.வி.களை அகற்றிய பின்னர், எஸ்.டி.வி 395 மீது அதிரடி திருத்தம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.395-திட்டத்தில் நன்மைகள் குறைப்பு.!

அதன்படி இந்த திருத்தத்தின் மூலம் பிஎஸ்என்எல் சில ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களில் பயன்படுத்தி குரல் அழைப்பு வரம்பை மீண்டும் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது திருத்தப்பட்ட எஸ்.டி.வி 395 ஆனது 3000 ஆன்-நெட் நிமிடங்கள் மற்றும் 1800 ஆஃப்-நெட் நிமிடங்கள் வழங்கும். முன்னதாக இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்கியது. மேலும் அழைப்பு நன்மைகளை தவிர்த்து எஸ்.டி.வி 395 ஆனது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 71 நாட்கள் ஆகும். இதன் நன்மையை மட்டும் சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகும் கூட அப்படியே உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.395-திட்டத்தில் நன்மைகள் குறைப்பு.!

குறிப்பாக எஸ்.டி.வி 395 திட்டம் மீதான இந்த திருத்தம் பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது. திருத்தப்பட்ட எஸ்.டி.வி 395 பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்.டி.வி 395 ஆனது இப்போது 3000 ஆன்-நெட் நிமிடங்கள் மற்றும் 1800 ஆஃப் நெட் நிமிடங்களை இலவசமாக வழங்கும். பின்பு இதே எஸ்.டி.வி 395 ஆனது வரமபற்ற குரல் அழைப்போடு அனுப்பப்பட்டது. மேலும் இப்போது குறிப்பிட்ட இலவச நிமிடங்களுக்கு பிறகு அனைத்து குரல் அழைப்புகளும் நிமிடத்திற்கு 20 பைசா என்கிற விகிதத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.395-திட்டத்தில் நன்மைகள் குறைப்பு.!

இதன் ஒப்பீட்டை பொறுத்தவரை, தனியார் டெலிகாம் நிறுவனங்களாள ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவைகள் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குவதால் இது பிஎஸ்என்எல்லில் இருந்து வெளிவரும் ஒரு "சுவாரஸ்யமான" நடவடிக்கையாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரம்புக்கு உட்படுத்தப்பட்ட ஆஃப்-நெட் குரல் அழைப்பு நிமிடங்களையே வழங்குகிறது. குறிப்பிட்ட வரம்பை கடந்த பின்னர் நிமிடத்திற்கு ஆறு பைசா என்கிற விகிதத்தில் ஜியோ கட்டணம் வசூலிக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.395-திட்டத்தில் நன்மைகள் குறைப்பு.!

குறிப்பாக குரல் அழைப்பு மீதான FUP வரம்பை மீண்டும் கொண்டுவருவதற்கு பிஎஸ்என்எல் சரியான காரணத்தை அல்லது விளக்கத்தை வழங்கவில்லை. ஆனால் 3000 பி.எஸ்.என்.எல் டூ பி.எஸ்.என்.எல் நிமிடங்கள், அதுவும் 71 நாட்களுக்கு என்கிற நன்மையானது இந்த திட்டத்தை தவறாமல் ரீசார்ஜ் செய்யும்படி பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை நிச்சயம் தூண்டிவிடலாம்.

பிஎஸ்என்எல் அதன் எஸ.டி.வி 395 உடன் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. முன்பு குறிப்பிட்டபடி இந்த திட்டத்தில் வேலிடிட்டி 71நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Bsnl Revises Stv 395 Bring Back Voice Calling Limit To Prepaid Users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X