BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!
இந்த ஆண்டிற்கான சுதந்திர தினம் மிகவும் சிறந்த சுதந்திர தினமாக அமையப் போகிறது. காரணம், இந்தியாவில் சுதந்திர தினத்திற்கு முன்பாக 5ஜி சேவை துவங்கப்பட வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் இந்த மாதமே அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் 5ஜி நோக்கி மும்முரமாக இருக்கும் நேரத்தில், BSNL நிறுவனம் தனது பெயர்களை ஈர்க்க ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BSNL அறிவித்த முதல் சலுகை என்ன தெரியுமா?
வரவிருக்கும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்), அதன் பயனர்களுக்கு ஒரு விளம்பர சலுகையை வழங்குகிறது. இதில் பயனர் ரூ.150 டாப்-அப் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு ரூ.150 மதிப்புள்ள டாக்டைம் அப்படியே முழுவதுமாக கிடைக்கும். இதன் பொருள் பயனர்களுக்கு முழு மதிப்பு டாக் டைம் அப்படியே முழுமையாக வழங்கப்படும். இந்த விளம்பரச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்று BSNL அறிவித்துள்ளது.

குறுகிய கால சலுகையா? எப்போதிருந்து எப்போது வரை கிடைக்கும்?
BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சலுகை, இந்த சுதந்திர தினத்தன்று லைவ் செய்யப்படும். அதாவது ஆகஸ்ட் 15, 2022 ஆம் தேதி அன்று தொடங்கி, ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 21, 2022 ஆம் தேதி அன்று முடிவடையும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையுடன் BSNL இலிருந்து இன்னும் சில சலுகைகளும் கிடைக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், ரூ.2399 மற்றும் ரூ.2999 திட்டங்களுடன் பயனர்கள் 75ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.

இந்த 2 திட்டங்களுடன் 75 ஜிபி டேட்டா இலவசமா?
இந்தச் சலுகையைப் பற்றி மேலும் அறிய, தொடர்ந்து படியுங்கள். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விளம்பர சலுகையை இப்போது கொண்டு வந்துள்ளது. இவை ரூ.2399 மற்றும் ரூ.2999 விலையுள்ள நீண்ட கால திட்ட வவுச்சர்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களும் மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் நீண்ட காலத்திற்கு ஹெவி-டேட்டா திட்டங்களை விரும்புவோருக்கு நல்ல விருப்பங்களாகும்.

எப்போது வரை இந்த சலுகை நீடிக்கும்?
தற்போது, இந்த திட்ட வவுச்சர்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கினால், BSNL இலிருந்து கூடுதல் டேட்டாவைப் பெறுவீர்கள். இது BSNL வழங்கும் வரையறுக்கப்பட்ட கால சலுகையாகும் என்பதை மறக்க வேண்டாம். மேலே நாம் பார்த்த ரூ.150 திட்டம் உங்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை கிடைக்குமென்பது போல, இந்த மற்ற இரண்டு திட்டங்களும் உங்களுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

ரூ.2399 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மை
வரவிருக்கும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு BSNL கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ.2399 மற்றும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டங்களில் 75ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால சலுகையாகும். இங்கு இரண்டு திட்டங்களின் மற்ற நன்மைகளும் அப்படியே இருக்கும். ஆனால், கூடுதல் டேட்டாவை வாடிக்கையாளர்களால் மொத்தமாகப் பயன்படுத்தப்படலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்டம்
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. முதல் 30 நாட்களுக்கு இலவச PRBT மற்றும் முதல் 30 நாட்களுக்கு Eros Now என்டர்டெயின்மென்ட் அணுகலும் இதில் உள்ளது. தற்போது, பயனர் இந்த திட்டத்தை வாங்கினால், 75ஜிபி டேட்டாவை இலவசமாக கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா 730ஜிபி இல் இருந்து 805ஜிபி ஆக உயருகிறது.

பிஎஸ்என்எல் ரூ 2999 திட்டம்
பிஎஸ்என்எல் அதன் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டமும் ரூ.2399 திட்டத்தைப் போன்ற பலன்களைக் கொண்டுள்ளது. ஒரே பெரிய வித்தியாசம் என்னவென்றால், ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் தினசரி 3ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். கூடுதலாக 75ஜிபி டேட்டாவுடன், இந்த திட்டம் மொத்தம் 1170ஜிபி டேட்டாவுடன் இப்போது வழங்கப்படுகிறது.

ரூ.2999 ப்ரீபெய்ட் திட்ட நன்மைகள் என்ன?
ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம், உங்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. முதல் 30 நாட்களுக்கு இலவச PRBT மற்றும் முதல் 30 நாட்களுக்கு Eros Now என்டர்டெயின்மென்ட் அணுகலும் இதில் உள்ளது. தற்போது, பயனர் இந்த திட்டத்தை வாங்கினால், 75ஜிபி டேட்டாவை இலவசமாகக் கிடைக்கும். இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்வதற்கான சரியான நேரம் இது, இந்த சலுகையைப் பயன்படுத்தி, 75ஜிபி டேட்டாவை இலவசமாகப் பெற்றுப் பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications