சத்தமின்றி 1500ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் சத்தமின்றி ஒரு புத்தம் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள திட்டத்தின் விலை ரூ.1,999-ஆகும். இது 1500ஜிபி சிஎஸ்55 என்றும் அழைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் - ஜியோ

பிஎஸ்என்எல் - ஜியோ

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது ரூ.2,499-மதிப்புள்ள ஜியோ ஃபைபர் டயமண்ட் திட்டத்திற்குபோட்டியாக வந்துள்ளது என்றே கூறலாம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டங்களின்நன்மைகளைப் பார்ப்போம்.

பாரத் ஃபைபர் போலியோ

பாரத் ஃபைபர் போலியோ

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த திட்டம் பாரத் ஃபைபர் போலியோவின் ஒரு பகுதியாகும்,மேலும்இது 20எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகிறமு என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த திட்டம் விளம்பரம்அடிப்படையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?

இரு வட்டங்களில் மட்டும் கிடைக்கும்

இரு வட்டங்களில் மட்டும் கிடைக்கும்

அதன்படி ரூ.1,999 விளம்பர பாரத் ஃபைபர் திட்டமானது தெலுங்கானா மற்றும் சென்னை ஆகிய இரு வட்டங்களில்மட்டும் கிடைக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அடுத்த 90நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூ காலரை பயன்படுத்தி பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது: எப்படி தெரியுமா?ட்ரூ காலரை பயன்படுத்தி பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது: எப்படி தெரியுமா?

குரல் அழைப்பு நன்மை

குரல் அழைப்பு நன்மை

ஒரு மாத காலம் என்கிற வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1999திட்டத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், டேட்டாநன்மைகளை தவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. இது பாரத் ஃபைபர் போர்ட்ஃபோலியோவின்
ஒரு பகுதியாக இருப்பதால் சிறப்பான டேட்டா FUP வரம்பை வழங்குகிறது.

1500 ஜிபி அளவிலான டேட்டா

1500 ஜிபி அளவிலான டேட்டா

இந்த திட்டத்தை பற்றி விரிவாக பேசுகையில், ரூ.1,999-திட்டமானது 200எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் மொத்தம்1.5டிபி அதாவது 1500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டா வரம்பை நீங்கள் மீறிவிட்டால்இணைய வேகமானது 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த 2எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் பதிவிறக்கம்
செய்ய அல்லது பதிவேற்ற எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி,இந்த திட்டம் 90நாட்களுக்கு சென்னை மற்றும் தெலுங்கானா வட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்யகிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

புதிதாக அறிமுகம்

இருந்தபோதிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.1999 திட்டம், இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும்வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் இந்த திட்டத்தின் நிறுவல் கட்டணங்களை பொறுத்தரை, பிஎஸ்என்எல்
ஒரு மாத வாடகையை பாதுகாப்பு வைப்புத்தொகையாக வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்ற பாரத்ஃபைபர் திட்டங்களில் ரூ.999 மதிப்புள்ள அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்குகிறது. ஆனால் ரூ.1,999பாரத் ஃபைபர் திட்டத்தில் இதே நன்மைகள் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
BSNL Brings 200 Mbps Bharat Fibre Broadband Plan With 1.5TB FUP Limit at Rs 1,999 per Month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X