அக்டோபர் முதல் அதிவேக இண்டர்நெட் : பிஎஸ்என்எல்..!

By Meganathan
|

பிஎஸ்என்எல் இணையதள வேகமானது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் 512 கேபிபிஎஸ் அளவு குறைந்த பட்ச வேகமாக வழங்கி வருகின்றது. இதன் காரணமாக அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகளவில் இழந்து வருகின்றது. மார்ச் 2014 முதல் மார்ச் 2015 ஆம் ஆண்டு வரையிலான கால அளவில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் வயர்லெஸ் சேவை பயன்படுத்தும் 1.78 கோடி பயனாளிகளையும், வயர்லைன் பயன்படுத்தும் சுமார் 20 லட்சம் பயனாளிகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் அதிவேக இண்டர்நெட் : பிஎஸ்என்எல்..!

அதகளவிலான வாடிக்கையாளர்களின் இழப்பு காரணமாக அந்நிறுவனம் ரூ.7,600 கோடி வரை இழப்புகளை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பினை ஈடு செய்ய அதிக வேகத்தினை குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன் படி புதிய திட்டத்தினை ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இண்டர்நெட் வேகம் 2 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தை துவங்கி வைத்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

செப்டம்பர் 2015 : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

அக்டோபர் முதல் அதிவேக இண்டர்நெட் : பிஎஸ்என்எல்..!

இண்டர்நெட் வேகம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பழைய விலையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL to Boost Minimum Broadband Speed to 2Mbps. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X