டிச.31 முடிந்தது.. BSNL ரூ.1 க்கு ரீசார்ஜ்.. உடனே இதை பண்ணிடுங்க.. 30 நாட்களுக்கு வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ரூ.1 திட்டத்தை பெறுவதற்கான தேதி இன்றுடன் முடிகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மலிவான விலைக்கு 30 நாட்களுக்கு தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற வேண்டுமானால், உடனடியாக இதை செய்து முடித்துவிடுங்கள்.
புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் ரூ.1 மதிப்பிலான திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை சிம் ஆக்டிவேட் செய்யப்பட்ட உடனேயே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ரூ.1 விலைக்கே 30 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். மேலும், டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடுக்கப்பட்ட இந்த திட்டம் பல முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நீட்டிப்பு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிகிறது. ஆகவே, ரூ.1 விலை கொண்ட திட்டத்துக்கு இன்று கடைசி நாளாக இருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் கிடைக்காமல் போகலாம்.
புது வருடத்தை முன்னிட்டு நீட்டிப்பும் செய்யப்படலாம். ஆனால், இப்போது வரை பிஎஸ்என்எல் நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை. ஆகவே, டிசம்பர் 31ஆம் தேதியான இன்று கடைசி நாளாக எடுத்து கொள்ளலாம். புதிய சிம் கார்டு வாங்கிய பிறகு சில மணி நேரங்களில் அது ஆக்டிவேட் செய்யப்படுகிறது. பிறகு பிஎஸ்என்எல் போர்டலில் ரூ.1 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 1 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 1 Recharge Plan): புதிய சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் முதல் ரீசார்ஜ் திட்டமாக இதை செய்ய வேண்டும். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த 30 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் வாய்ஸ் (Unlimited Local, STD, Roaming Voice) கொடுக்கப்படும்.
தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளை வெறும் ரூ.1 விலைக்கு கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
இதேபோல புத்தாண்டுக்கான வருடாந்திர திட்டமானது மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை ஒப்பிடுகையில் இது மலிவான விலைக்கே கிடைக்கிறது. அடுத்த ஒரு வருடத்துக்கு கம்மியான செலவில் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 2,799 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.2799 Recharge Plan): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லில் கிடைக்கும் வருடாந்திர திட்டங்களில் அதிகபட்சம் 2.5 ஜிபி டேட்டா மட்டுமே தினசரிக்கு கிடைக்கிறது.
ஆனால், இதில் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷ்னல் ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தினமும் 3 ஜிபி டேட்டா கிடைப்பதால், வருடம் முழுவதுக்கும் மொத்தமாக 1,095 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








