BSNL அதிரடி.. ரூ.99 விலை 450+ சேனல்கள்.. இனி காஸ்டலி கேபிள் TV எதுக்கு? உடனே BiTV சேனல்களை செக் பண்ணுங்க..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அதன் வடிக்கையாளர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) வைத்துள்ள அணைத்து பயனர்களுக்கும்நிறுவனம் இப்போது அதன் BiTV சேவையை 450+ லைவ் டிவி சேனல்களுடன் (450+ live TV channels) அணுக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இலவச சேவை கிடைக்குமென்று வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். BiTV சேவையை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் புதிதாக டைரக்ட்-டூ-மொபைல் (Direct-to mobile) என்ற புதிய BiTV சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய BiTV சேவை சுமார் 450-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான (BSNL 450+ Live TV Channels) அணுகலை உங்கள் ஸ்மார்ட்போனில் (smartphone) கிடைக்கும்படி செய்கிறது. OTT Play உடன் இணைந்து, இப்போது இந்த அம்சத்தை இந்தியா முழுவதும் உள்ள BSNL மொபைல் பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

BSNL அதிரடி.. ரூ.99 விலை 450+ சேனல்கள்.. இனி காஸ்டலி கேபிள் TV எதுக்கு?
ஆம், உங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) இருந்தால் மட்டும் போதும், இந்த BiTV சேவையின் கீழ் கிடைக்கும் 450+ லைவ் டிவி சேனல்களை நீங்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல், முற்றிலும் இலவசமாக பார்த்து (Free live TV channels) ரசிக்கலாம். 450+ என்று கூறுகையில் ஏறக்குறைய 500 சேனல்களுக்கு மிக நெருக்கமான சேனல்கள் வரை அணுக கிடைக்கிறது. இதுவரை குறிப்பிட்ட சில வட்டங்களில் மட்டும் கிடைக்கப்பட்டு வந்த BiTV சேவை இப்போது இன்னும் பல வட்டங்களில் கிடைக்க துவங்கியுள்ளது.
எந்த விலை திட்டங்களை ரீசார்ஜ் (BSNL recharge) செய்தால், இந்த BiTV திட்டங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்ற கேள்வி எழுந்தது, அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம், "நீங்கள் எந்த விலை கொண்ட திட்டத்தை பயன்படுத்தினாலும், BiTV உங்களுக்கு இலவசம் தான் மக்களே" என்று தெரிவித்துள்ளது. இப்போது BSNL வாடிக்கையாளர்கள் மீண்டும் ஒரு சந்தேக கேள்வியை எழுப்பியுள்ளனர்.
BSNL வாய்ஸ் ஒன்லி திட்டத்திற்கும் BiTV சேவை கிடைக்குமா? 450+ TV சேனல் கிடைக்குமா?
BSNL வழங்கும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை ரீசார்ஜ் செய்தலும் BiTV சேவை கிடைக்கப்பெறுமா என்ற சந்தேக கேள்வி எழுப்பியுள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் ரூ. 99 பிளான் (BSNL Rs 99 Voice Only Plan) மற்றும் பிஎஸ்என்எல் ரூ. 439 பிளான் (BSNL Rs 439 Voice Only Plan) திட்டங்களை தேர்வும் செய்யும் வாடிக்கையாளர்களும் கூட BiTV சேவையை பயன்படுத்தலாம் என்று BSNL கூறியுள்ளது.
நீங்கள் 99 ரூபாய் செலவு செய்து, BSNL வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் (BSNL voice only plan recharge) செய்தால் கூட உங்களுக்கு BiTV வழங்கும் 450-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை நீங்கள் பார்வையிடலாம் என்று BSNL கூறியுள்ளது இந்திய மக்களை குஷி அடைய செய்துள்ளது. இந்த இலவச சேனல்களை பார்க்க உங்களிடம் டேட்டா பேலன்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான கேபிள் டிவி சேவைக்காக மாதம் 300 ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்யும் மக்கள் கூட, இனி ஒரு BSNL சிம் கார்டை வாங்கிக்கொண்டு, 450+ லைவ் டிவி சேனல்களை அவர்களின் போனில் கண்டு மகிழலாம் என்று செய்தி பல கோடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ் ஆக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








