BSNL அதிரடி.. Mobile-க்கு 300+ FREE சேனல்.. Smart TV-க்கு 500+ FREE சேனல்.. ஒரு BSNL SIM போதும் ஜமாய்க்க..
பிஎஸ்என்எல் (BSNL) என்ற அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தற்போது இந்தியாவில் அதன் புதிய இலவச டைரக்ட் டு மொபைல் BiTV சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை எந்தவித கட்டணமும் இல்லாமல் 300 லைவ் டிவி சேனல்களை இப்போது பார்க்க அனுமதிக்கிறது. இந்த புதிய சேவை இப்போது எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதன் நன்மைகள் என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய BiTV சேவையின் மூலம் இந்தியாவில் உள்ள டிடிஎச் (DTH) மற்றும் கேபிள் டிவி (Cable TV) சந்தையை சீர்குலையக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த BiTV சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் மக்களுக்கு வழங்குகிறது. மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனங்களில் இனி நேரடியாக டிவி சேனல்களை காண இது அனுமதிக்கிறது.

BSNL அதிரடி.. Mobile-க்கு 300+ FREE சேனல்.. Smart TV-க்கு 500+ FREE சேனல்:
BSNL BiTV சேவை முதற்கட்டமாக புதுச்சேரியில் (Puducherry) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுவதும் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. BSNL அதன் அதிகாரப்பூர்வ X கைப்பிடியில், இந்திய மக்கள் இனி BiTV சேவையின் மூலம் டிவி பார்க்கும் முறையை மாற்றபோகிறார்கள் என்று கூறியுள்ளது. காரணம், இனி கேபிள் டிவி கணேஷனிற்கென்று (cable டவ connection) தனியாக பணம் செலுத்த தேவையில்லை.
கேபிள் டிவி இணைப்பிற்கு மாற்றாக, மக்கள் கையில் இனி ஒரே ஒரு பிஎஸ்என்எல் சிம் மட்டும் இருந்தால் போதும், 300-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாக பார்த்து மகிழலாம். 300+ லைவ் டிவி சேனல் (BSNL 300+ Live டவ channels) மட்டுமின்றி, இலவசமாக ஆன்லைன் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை நேரடியாக தங்கள் மொபைல் சாதனங்களில் இலவசமாக அனுபவிக்க முடியும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவை (fibre-based intranet TV service - IFTV):
இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 இன் போது வெளியிடப்பட்ட BSNL இன் ஏழு புதிய சேவைகளின் ஒரு பகுதியாக BiTV உள்ளது. இவற்றில், பிஎஸ்என்எல் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவை (fibre-based intranet TV service - IFTV) ஏற்கனவே கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், BSNL பிராட்பேண்ட் பயனர்கள் 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை இலவசமாகப் பார்க்க புதிய BSNL IFTV சேவை அனுமதிக்கிறது.
டைரக்ட்-டு-மொபைல் (Direct-to-Mobile - D2M) சேவையானது இப்போது மொபைல் பயனர்களுக்கு இந்த சலுகையை விரிவுபடுத்துகிறது. இது பாரம்பரிய DTH வழங்குநர்களுக்கு ஒரு தீவிர போட்டியாளராக அமைகிறது. OTT இயங்குதளங்களின் எழுச்சி ஏற்கனவே DTH பார்வையாளர்களை பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது BSNL இன் BiTV இந்த மாற்றம் பெரிய தாக்கத்தை கேபிள் டிவி வழங்குநர்கள் மேல் உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்களில் இலவச நேரலை டிவி மூலம், மொபைல் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த சேனல்களுக்கு தடையின்றி அணுகலை அனுபவிக்க முடியும், இது வழக்கமான கேபிள் டிவி செலவை குறைக்கிறது.


Click it and Unblock the Notifications








