BSNL தந்த இலவசம்.. பைசா காசு வேண்டாம்.. இனி எல்லோருக்கும் 450+ டிவி சேனல் FREE.. Mobile பயனர்களே கவனியுங்க..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இன்று முதல் அதன் மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட (mobile prepaid recharge) பயனர்களுக்குக்கும் இனி 450+ லைவ் டிவி சேவைகளை வழங்கவுள்ளது (450+ Live Tv channels). ஆம், கேபிள் டிவி சேவை போன்ற BSNL BiTV சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பல கோடி வாடிக்கையாளர்களுக்கு புதிய பொழுதுபோக்கு அம்சத்தை அவர்களின் கையடக்கத்தில் வழங்கவுள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு துறையில் மிக பெரிய மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத சேவையை தற்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்க துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் BiTV என்ற டைரக்ட்-டூ-மொபைல் டிவி (Direct-to-Mobile TV) என்ற புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த சேவை இன்டர்நெட் வசதியே இல்லாமல், உங்கள் மொபைல் (mobile) மற்றும் ஸ்மார்ட்போன் (smartphone) சாதனங்களுக்கு நூற்றுக்கணக்கான லைவ் டிவி (Live TV) சேனல்களை நேரடியாக அணுகும் சேவையை ஒரு பைசா செலவில்லாமல் இலவசமாக அணுகும் படி BSNL நிறுவனம் இந்த BiTV சேவையை அறிமுகம் செய்தது.
முதற்கட்டமாக, இந்த சேவையின் கீழ் வெறும் 300+ லைவ் டிவி சேனல்களை (350+ Live TV channels) மட்டுமே பிஎஸ்என்எல் வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது இந்த சேவையின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் 450+ மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை (BiTV 450+ Live TV channels) வழங்க துவங்கியுள்ளது. இந்த சேவையை BSNL முன்பு குறிப்பிட்ட வட்டங்களில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே கிடைக்கும் படி செய்திருந்தது.
இப்போது இந்த சேவையை இந்தியாவில் உள்ள பெரும்பாலான வட்டங்களில் கிடைக்கும் படி, பிஎஸ்என்எல் BiTV சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இது ஒரு குட் நியூஸ் என்று நினைத்த BSNL வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது BiTV சேவையை அதன் சிம் கார்டு (BSNL SIM card) வைத்துள்ள அணைத்து வாடிக்கையாளர்களும் அணுகலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிகாம் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள், அவர்களின் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) OTT சேவைகளை மட்டுமே வழங்குகிறார்கள்.
அதுவும் இந்த எக்ஸ்ட்ரா OTT விருப்பங்களை வழங்கும் திட்டங்களின் விலை கணிசமாக பட்ஜெட்டிற்கு அப்பால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், BSNL நிறுவனம் தற்போது அதன் ஆரம்ப விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் முதல் பிரீமியம் திட்டங்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் வரை அனைவரும் இலவசமாக 450+ லைவ் டிவி சேனல்களை கண்டு மகிழலாம் என்று தாராளம் காண்பித்துள்ளது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications