ரூ.329 விலையில் 1000 ஜிபி டேட்டாவா? BSNL வழங்கும் இன்னும் ஏராளமான திட்டங்கள் லிஸ்டில் இருக்கு..
நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், குறைந்த செலவில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பை நீங்கள் விரும்பினால், இணையத்தில் நீங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்வதற்கு போதுமான வேகத்தை இந்த திட்டம் உங்களுக்கு வழங்குகிறது. BSNL ஒரு திடமான நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டத்தை நம் நாட்டின் மக்களுக்காக வழங்குகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (BSNL) ஃபைபர் பிராட்பேண்ட் பிரிவான பாரத் ஃபைபர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் நுழைவு-நிலை விருப்பமாகப் பயனர்களுக்கு ரூ. 329 திட்டத்தை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.329 பிராட்பேண்ட் திட்டம்
இது அனைத்து முக்கிய இணையச் சேவை வழங்குநர்களாலும் (ISPs0) வழங்கப்படும் மிகவும் மலிவு விலையில் உள்ள பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் சிறப்பு என்ன என்பதைப் பற்றித் தெளிவாகப் பார்ப்போம். பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.329 பிராட்பேண்ட் திட்டமானது 1000ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 20 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது. பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் வேகம் இரண்டுமே சீரானது, அதாவது இரண்டுமே 20 Mbps வேகத்தில் கிடைக்கிறது. 20 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்தும் எவருக்கும் 1000ஜிபி டேட்டா கேப் போதுமானது.

யாருக்கெல்லாம் இந்த திட்டம் சிறப்பானது?
ஒரே நேரத்தில் ஒருவர் அல்லது இரண்டு அல்லது மூன்று பயனர்கள் பயன்படுத்தினால் எளிதாக ஒரு மாதம் வரை இந்த டேட்டா நீடிக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முடிந்தவரைச் செலவுகளைக் குறைத்து, முடிந்தவரை அதிகமாக டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது. வீட்டிலிருந்து வேலை செய்யும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், பல சாதனங்கள் மற்றும் பயனர்கள் Wi-Fi நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி உடன் இந்த திட்டத்தின் விலை என்ன?
மேலும், இந்த திட்டத்தின் விலையில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வரிக்குப் பிறகு, இந்த திட்டத்தின் மொத்தச் செலவு ரூ. 388.22 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பட்ஜெட் ஃபைபர் திட்டமாக இருப்பதால், ரூ. 400 விலைக்குக் கீழே உள்ள திட்டங்களைத் தேடும் பட்ஜெட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். BSNL வழங்கும் இந்த ரூ.329 திட்டம் உங்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் கூட, பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வழங்கும் பிற அதிவேகத் திட்டங்களுக்கு நீங்கள் எப்போதும் மேம்படுத்தலாம்.

பிற வட்டங்களில் கிடைக்கும் ரூ. 449 திட்டம்
BSNL இன் இந்த ரூ. 329 திட்டத்திற்குப் பிறகு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வழங்கும் அடுத்த மலிவு விருப்ப திட்டம் என்றால், அது ரூ. 449 திட்டமாகும். முக்கிய குறிப்பு, சில மாநிலங்கள் மற்றும் வட்டங்களில் BSNL இன் இந்த ரூ. 329 திட்டத்தை பிஎஸ்என்எல்-ல் வழங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, பட்ஜெட் பிரியர்கள் உங்கள் வட்டத்தில் எந்த திட்டம் கிடைக்கிறது என்பதை ஒரு முறை சோதனை செய்து பாருங்கள். ரூ. 329 திட்டம் கிடைக்காவிட்டால், ரூ. 449 திட்டம் உங்களுக்கு நல்ல விருப்பமாகும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் ரூ.399 திட்டம் வழங்கும் நன்மைகள்
தமிழ்நாட்டு BSNL பயனர்களுக்கு நிறுவனம், நுழைவு நிலை பிராட்பேண்ட் திட்டத்தை வெறும் ரூ. 399 என்ற விலை புள்ளியில் வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து ரூ. 599, ரூ. 799, ரூ. 999, ரூ. 1277, ரூ. 1499, ரூ. 2499, ரூ. 4499 என்ற விலைகளில் நிறுவனம் மொத்தம் 8 சூப்பர் நன்மைகள் வழங்கும் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ. 399 விலை கொண்ட அடிப்படை திட்டம் உங்களுக்கு 30 Kbps வேகத்தில் 1000 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்கள் 1 மாத செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இதேபோல், நிறுவனம் 6 மாதம், 12 மாதம், 24 மாதம் போன்ற செல்லுபடியுடனும் வெவேறு திட்டங்களை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications