Home
News

BSNL இலவசம்: ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் கிடைக்கும் திட்டங்கள் இது தான்..

பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களைத் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பாரத் பைபர் (Bharat Fiber) என்ற பெயரில் நிறுவனம் 300 எம்.பி.பி.எஸ் வரையிலான பிராட்பேண்ட் வேகத்துடன் வருகின்றது. இப்போது, BSNL நிறுவனம் தனது பாரத் பைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு ரூ.1,499 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது.

BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்

BSNL வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்

BSNL நிறுவனம் ரூ. 449 விலையில் ஃபைபர் பேசிக் என்ற விலை மலிவான பிராட்பேண்ட் திட்டத்தை வைத்துள்ளது. இதற்குப் பின் ரூ.599 விலையில் ஃபைபர் பேசிக் பிளஸ் என்ற பிராட்பேண்ட் திட்டத்தை நிறுவனம் வைத்துள்ளது. அதேபோல், ரூ. 799 விலையில் நிறுவனம் இப்போது ஃபைபர் வால்யூ என்ற திட்டத்தைத் தன்வசம் வைத்துள்ளது. பிரீமியம் பிராட்பேண்ட் திட்டங்களாக ரூ. 999 விலையில் ஃபைபர் பிரீமியம் என்ற திட்டத்தையும் மற்றும் ரூ.1,499 என்ற விலையில் ஃபைபர் அல்ட்ரா என்ற பிராட்பேண்ட் திட்டத்தையும் BSNL நிறுவனம் வழங்கி வருகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வேண்டுமா?

டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வேண்டுமா?

அமேசான் பிரைம் அல்லது நெட்ஃபிலிக்ஸ் போன்ற OTT பிளேயர்களுடன் பிஎஸ்என்எல் கூட்டாண்மைகளை நிறுவவில்லை, மேலும் ISP இன் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் அத்தகைய நன்மைகளை வழங்காது. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது, மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து திட்டங்களில் இரண்டு திட்டங்களுக்கு ஒரே மாதிரியான நன்மையை பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வழங்கி வருகிறது.

ரூ.999 மற்றும் ரூ.1,499 திட்ட நன்மைகள்

ரூ.999 மற்றும் ரூ.1,499 திட்ட நன்மைகள்

ரூ.999 மற்றும் ரூ.1,499 திட்டங்கள் எந்தவொரு கூடுதல் செலவில்லாமல் ரூ.1,499 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் வருகின்றது. இப்போது பிஎஸ்என்எல் ரூ. 999 மற்றும் ரூ.1,499 பிராட்பேண்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம். ரூ. 999 விலையில், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் ஒவ்வொரு மாதமும் 3.3 டிபி வரை 200 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது. FUP வரம்புக்குப் பிறகு, பிஎஸ்என்எல் பயனர்கள் வரம்பற்ற தரவை 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பயன்படுத்தலாம்.

3.3TB டேட்டாவுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா

3.3TB டேட்டாவுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா

ரூ.1,499 பாரத் ஃபைபர் திட்டம் 300 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் அதே 3.3TB FUP வரம்புடன் வருகிறது. ஆனால், இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் சேர்த்து வழங்குகின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமே இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா, எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் நமக்கு கிடைக்கிறது. அதுவும் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் ரூ.1,499 மதிப்புள்ள இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எந்த நெட்வொர்க்கும் வழங்காத பலே நன்மை

இதுவரை எந்த நெட்வொர்க்கும் வழங்காத பலே நன்மை

இதற்கு முன்பு வரை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் போன்ற ஐஎஸ்பிக்கள் பிராட்பேண்ட் திட்டங்களுடன் அதன் பயனர்களுக்கு நிறைய OTT சந்தாக்களை வழங்குவதை நாங்கள் கண்டிருக்கிறோம், ஆனால் முதல் முறையாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது பயனர்களுக்கு வழங்கும் ஒரே ஐஎஸ்பி நெட்வொர்க்காக பிஎஸ்என்எல் மட்டுமே இன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் கூட தனது பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் விஐபி சந்தாவை மட்டுமே வழங்குகிறது. பிரீமியம் சந்தாவை இதுவரை யாரும் வழங்கவில்லை.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா விலை என்ன?

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா விலை என்ன?

பிற ஐஎஸ்பிக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகின்றன, இது ஒரு வருடத்திற்கு ரூ. 399 செலவாகிறது. தெரியாதவர்களுக்கு, டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் ஒரு வருடத்திற்கு ரூ. 1,499 மற்றும் ஒரு மாதத்திற்கு ரூ. 299 ஆகும். மீதமுள்ள மலிவு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ 449, ரூ 599 மற்றும் ரூ .799 போன்றவை அத்தகைய சந்தா நன்மைகளை வழங்காது. தொழில்துறையில் வேறு எந்த இணையச் சேவை வழங்குநரும் (ஐஎஸ்பி) 799 ரூபாய்க்குக் குறைவான பிராட்பேண்ட் திட்டங்களுடன் OTT சந்தாக்களை வழங்கவில்லை.

ரூ. 449 திட்டம் மற்றும் வேகம்

ரூ. 449 திட்டம் மற்றும் வேகம்

வேகத்தைப் பொறுத்தவரை, ரூ. 449 திட்டம் பயனர்களுக்கு 30 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணையத்தில் உலாவ அனுமதிக்கிறது, அதன்பின்னர் ரூ. 599 திட்டம் 60 எம்.பி.பி.எஸ் வேகமும், ரூ. 799 திட்டம் 100 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் தனது பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தி 300 எம்.பி.பி.எஸ் வேகத்தை ரூ. 2,000 க்கு மேல் திட்டங்களுடன் வழங்கியது. பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் பிரிவில் சில பெரிய மாற்றங்களைச் செய்வதைப் பார்ப்பது நல்லது.

Best Mobiles in India

English summary
BSNL Bharat Fiber Broadband Plans of Rs 999 and Rs 1,499 Now Offers Disney+ Hotstar Premium Subscription : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X