அவசரமே இல்ல., மொத்தம் 400 ஜிபி: தீபாவளி வரை பிஎஸ்என்எல் திட்டம் நீட்டிப்பு!
பிஎஸ்என்எல் வழங்கும் பிபி காம்போ 400 ஜிபி ரூ.525 பிராட்பேண்ட் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட்
பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட், பாரத் பைபர் பிபி காம்போ 400ஜிபி ரூ.525 மாதாந்திர திட்டத்தை ஜூலை 2019 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஆரம்பத்தில் விளம்பரத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஆகஸ்ட் 1 2020 வரை மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் நவம்பர் 7, 2020 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

400 ஜிபி 525 மாதாந்திர திட்டம்
பாரத் பைபர் பிபி காம்போ 400 ஜிபி 525 மாதாந்திர திட்டம் முதன்முதலில் ஹரியானா வட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.525 திட்டம் 2020 வரை அக்டோபர் வரை மட்டுமே செல்லுபடியாகும் என கூறியிருந்தது. இருப்பினும் இந்த திட்டம் விளம்பர அடிப்படையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாரத் பைபர் ரூ.525 திட்டம்
பிஎஸ்என்எல் பாரத் பைபர் ரூ.525 திட்டமானது நவம்பர் 7 வரை கிடைக்கும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஹரியானா வட்டத்தில் கிடைக்கும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25 எம்பிபிஎஸ் வேகத்தில் 400 ஜிபி டேட்டா
ரூ.525 திட்டம் பாரத் பைபர் பிபி காம்போ 400 ஜிபி 525 மாதாந்திர திட்டம் என அழைக்கப்படுகிறது. பாரத் பைபர் பிபி காம்போ 400 ஜிபி டேட்டாவானது 25 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும். வரம்பு முடிந்தவுடன் வேகம் 1 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரலழைப்புகளை மாதாந்திர திட்டத்தில் வழங்குகிறது.

2020 நவம்பர் 7 வரை
பாரத் பைபர் பிபி காம்போ 400 ஜிபி 525 மாதாந்திர திட்டத்தின் விலை ரூ.525 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2020 நவம்பர் 7 வரை செல்லுபடியாகும்.

100 ஜிபி சியூஎல் திட்டம்
பாரத் பைபர் 400 ஜிபி 525 மாதாந்திர திட்டமானது 100 ஜிபி சியூஎல் திட்டத்தை விட அதிக சலுகையோடு வழங்குகிறது. 100 ஜிபி சியூஎல் திட்டம் 20 எம்பிபிஎஸ் வேகத்தோடு 100 ஜிபி இணைய வரம்பை மட்டும் வழங்குகிறது அது நிறைவு பெற்றவுடன் வேகம் 2 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

புதிய திட்டம் அறிமுகம்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் சமீபத்தில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 100 ஜிபி CUL இணைய சேவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

20 எம்பிபிஎஸ் வேகத்தில் 100 ஜிபி
பிஎஸ்என்எல் இந்த புதிய திட்டம் ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரீசாரஜ் செய்யும்போது 100 ஜிபி டேட்டா 20 எம்பிபிஎஸ் வேகத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒருமாதம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications