BSNL ருத்ர தாண்டவம்.. மாதம் ரூ.168 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. பிப்.24 க்கு குறிச்சாச்சு.. 2.6 ஜிபி டேட்டா!
இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 4ஜி சேவையை கொடுக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் பிஎஸ்என்எல் பாரத் கனெக்ட் திட்டத்தை (BSNL Bharat Connect Plan) வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி, 2.6 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டின் குடியரசு தினத்துக்கான சிறப்பு திட்டமாக இந்த பிஎஸ்என்எல் பாரத் கனெக்ட் ரூ.2026 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பெறுவதற்கான கடைசி தேதியாக பிப்ரவரி 24ஆம் தேதி இருக்கிறது. இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் விடாமல் ரீசார்ஜ் செய்ய தொடங்கிவிட்டனர். ஏனென்றால், மாத செலவு வெறும் ரூ.168 ஆக மட்டுமே இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 2026 திட்ட விவரங்கள் (BSNL Rs 2026 Plan Details): பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர திட்டமாக இந்த ரூ. 2026 திட்டம் உள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2.6 ஜிபி டேட்டாவை கொடுத்துள்ளது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) கஸ்டமர்களுக்கு கொடுத்து உள்ளது.
ஆகவே, நாளொன்றுக்கு 2.6 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கு 949 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது முன்பு கிடைத்த வருடாந்திர திட்டங்களைவிட அதிக டேட்டா சலுகையாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த திட்டங்களை விட விலையும் மலிவாக இருக்கிறது. ஏனென்றால், 12 மாதங்களுக்கு ரூ.2026 தேவைப்படுகிறது.
ஆகவே, மாதத்துக்கு அந்த தொகையை வகுத்தால் ரூ.168 மட்டுமே செலவாகிறது. இந்த 2.6 ஜிபி டேட்டா சலுகைகள் போக வருடம் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுத்து உள்ளது.
ஜியோ மற்றும் ஏர்டெல்லில் அதிகபட்சம் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் மட்டுமே 365 நாட்கள் வேலிட்டிட்டி கிடைக்கும். ஆனால், இந்த பிஎஸ்என்என் திட்டத்தில் நாளொன்றுக்கு 2.6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் மலிவாகவும், அதிக சலுகைகளையும் கொண்டிருப்பதால், பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் மட்டுமே பெற முடியும்.
இந்த தேதிக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் வருடாந்திர திட்டம் மட்டுமே கிடைக்கும். ஆகவே, இந்த திட்டத்துக்கு அடுத்த ஆப்ஷனாக பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் இருக்கிறது. இதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகளே கிடைக்கும். ஆனால், டேட்டாவில் மற்றும் கொஞ்சம் மாறுபாடு இருக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 100 எம்பி டேட்டா குறைவாக இருக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் 912.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம்.
மேலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகையும் இதில் கிடைத்துள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், முதலில் பார்த்த திட்டம் பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








