அன்லிமிடெட் வாய்ஸ், டெய்லி 2GB டேட்டா, ஓடிடி, எஸ்எம்எஸ்னு.. இப்படி ஒரு BSNL பிளானை தான் பலரும் தேடுறாங்க!
சிலர் "உண்மையாவே இது பிஎஸ்என்எல் (BSNL) திட்டம் தானா?" என்று கேட்கலாம்.. மற்ற சிலர் "இப்படி ஒரு பிஎஸ்என்எல் பிளானை தான் தேடிகிட்டு இருக்கோம்!" என்று கூறலாம். அப்படி என்ன ரீசார்ஜ் இது? இதன் விலை நிர்ணயம் என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (Bharat Sanchar Nigam Limited) ரூ.269 ப்ரீபெய்ட் பேக்கை பற்றித்தான், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை எண்டர்டெயின்மென்ட் மற்றும் கேமிங் ப்ரீபெய்ட் பேக் (Entertainment and Gaming Prepaid Pack) என்று அழைக்கிறது.

ஏனென்றால் இது டெய்லி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து, ஓடிடி (OTT) மற்றும் கேமிங் (Gaming) நன்மைகளையும் வழங்குகிறது. இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதால் ரூ.269 திட்டமானது சிலரின் கண்களில் படாமல் போயிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
பிஎஸ்என்எல் ரூ.269-ன் வழக்கமான நன்மைகள்: இது லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வழங்குகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவையும், அந்த டேட்டா தீர்ந்த 40 கேபிபிஎஸ் (40Kbps) என்கிற வேகத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் (Unlimited Data) வழங்குகிறது.
நேஷனல் ரோமிங்கையும் (National Roaming) சேர்த்து ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் ரூ.269 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி (Validity) உடன் வருகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 56ஜிபி டேட்டா மற்றும் 2800 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.269-ன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் கேமிங் நன்மைகள்: இதன் கீழ் கிடைக்கும் பொழுதுபோக்கு நன்மைகளை பொறுத்தவரை ஈரோஸ் நவ் (Eors Now), லிஸ்ட்ன் போட்காஸ்ட் சேவைகள் (Lystn podcast services), லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) மற்றும் ஸிங் மியூசிக் (Zing Music) போன்ற சேவைகளை இலவசமாக கிடைக்கும்.
கேமிங் நன்மைகளை பொறுத்தவரை, ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சஸ் அரினா மொபைல் கேமிங் சர்வீஸ் (, Challenges Arena Mobile Gaming Service), ஆஸ்ட்ரோசெல் மற்றும் கேம்ஆன் சர்வீசஸ் (, Astrocell and GameOn services) மற்றும் கேமியம் (Gameium) போன்றவைகளை வழங்குகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) நன்மையையும் கிடைக்கும். இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களை ஹலோட்யூன்ஸ் (Hellotunes) ஆக செட் செய்யலாம். ரூ.269-ன் கீழ் கிடைக்கும் எல்லா நன்மைகளையும் பார்த்து விட்டோம். இப்போது இது யாருக்கெல்லாம் பெஸ்ட் ஆப்ஷனாக இருக்குமென்று பார்ப்போம்!
நீங்கள் வோல்ட்இ (VoLTE) ஆதரவை வழங்கும் 4ஜி ஸ்மார்ட்போனை வைத்து இருந்தால், கூடவே பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால், தினமும் ரூ.10 என்கிற செலவில் ரூ.269-ன் கீழ் கிடைக்கும் டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை தாறுமாறாக அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








