Home
News

இந்தியாவிலேயே ரூ.250-க்குள் இதான் பெஸ்ட் பிளான்.. BSNL ஆட்டம் ஆரம்பம்.. கடுப்பில் Jio, Airtel, Vi பயனர்கள்..

இந்தியாவில் இப்போது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் 25% வரை கடினமாக உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் வழக்கமாக ரீசார்ஜ் செய்து வந்த திட்டங்களை கூட, இப்போது அவர்களால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை. எந்த திட்டத்தை தேர்வு செய்வதென்றே குழப்பம் இப்போது எல்லோருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக, பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் பலரும் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நெட்வொர்க்கிற்கு மாறத்துவங்கியுள்ளனர்.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வுக்கு பிறகு ஒவ்வொரு திட்டமும் மிகப்பெரிய விலை ஏற்றத்தை கண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மட்டுமே குறைத்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இன்னும் மக்கள் ரூ.250 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தான் விரும்புகிறார்கள். அதை தான் பிஎஸ்என்எல் தளத்திலும் மக்கள் அதிகமாக தேடுகிறார்கள்.

இந்தியாவிலேயே ரூ.250-க்குள் இதான் பெஸ்ட் பிளான்.. BSNL ஆட்டம் ஆரம்பம்

இந்தியாவிலேயே ரூ.250-க்குள் இதான் பெஸ்ட் பிளான்.. BSNL ஆட்டம் ஆரம்பம்:
ரூ. 250 விலைக்குள் எந்த பிஎஸ்என்எல் திட்டம் சிறந்த திட்டம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 250 விலைக்குள் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL Prepaid Recharge Plans) வழங்குகிறது. அதிலிருந்து ஆகச்சிறந்த திட்டங்களாக திகழும் இரண்டு மிகவும் பிரபலமான பிஎஸ்என்எல் திட்டம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நிகழும் டெலிகாம் துறை யுத்தத்தில் வெற்றி பெறவும், மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ளவும், பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 108 திட்டம் மற்றும் ரூ. 249 திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் பெஸ்ட் திட்டமாக திகழ்கின்றன. காரணம், இந்த விலையில் இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் தான் என்றே கூட நாம் கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 108 திட்டம் (BSNL Rs 108 Plan):
இந்த திட்டம் ரூ. 108 விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 1GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் 500 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. கூடுதல் இலவச நன்மைகளும் இத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 199 திட்டம் (BSNL Rs 199 Plan):
இந்த திட்டம் ரூ.199 விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினசரி 2GB டேட்டா நன்மை, தினசரி 100 SMS நன்மை போன்றவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் BSNL Tunes+ Hardy Games+ Challenger Arena Games + Gameon&Astrotell+ Gameium+ Lystnpodcast + Zing + wow Entertainment போன்ற இலவச நன்மைகள் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ. 249 திட்டம் (BSNL Rs 249 Plan):
இந்த திட்டம் 249 ரூபாய் உடன் வருகிறது. இத்திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 2GB டேட்டா நன்மையுடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 45 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அக்டோபர் இறுதிக்குள் தமிழ்நாடு வட்டத்தை (Tamilnadu BSNL Circle) முழுமையாக பிஎஸ்என்எல் 3ஜி (BSNL 3G) சேவையில் இருந்து பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்கு மாற்றும் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 6 முதல் 9 மாத காலத்திற்குள் பிஎஸ்என்எல் அதன் 5ஜி (BSNL 5G) சேவையையும் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தும் என்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Best Plans Under Rs 250 To Recharge In India September 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X