அம்பானி மேல சத்தியம்.. ரூ.4-க்கு 2ஜிபி டெய்லி டேட்டா.. 365 டேஸ் வேலிடிட்டி.. மாஸ் காட்டும் BSNL ரீசார்ஜ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கடந்த சில தினங்களாக அதன் ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களில் சில மாற்றங்களை மற்றும் திருத்தங்களை செய்த வண்ணம் உள்ளது. பிஎஸ்என்ல்-ன் 4ஜி அறிமுகம் (BSNL 4G Launch) நெருங்கி வருவதே இதற்கெல்லாம் காரணமா என்று கேட்டால் அதற்கான சரியான பதில் எங்களிடம் இல்லை!
ஆனால் ஒவ்வொரு பயனருக்கும் ஏற்ற பரந்த அளவிலான திட்டங்கள் பிஎஸ்என்எல்-இடம் உள்ளதா என்று கேட்டால்.. அதற்கான பதில் எங்களிடம் உள்ளது. குறிப்பாக உங்கள் பகுதியில் பிஎஸ்என்எல்-ன் இண்டர்நெட்டின் ஸ்பீட் நன்றாக இருந்தால், ரூ.4-க்கு 2ஜிபி டெய்லி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் இந்த பிஎஸ்என்எல் டேட்டா ரீசார்ஜை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

4ஜி ஆக இருந்தாலும் சரி .. 3ஜி ஆக இருந்தாலும் சரி.. இந்த பிளான் பெஸ்ட்டு ஆப்ஷன்!
நினைவூட்டும் வண்ணம் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகள் ஏற்கனவே சில இடங்களில் நேரலையில் உள்ளது. ஒருவேளை நீங்கள் 4ஜி ஸ்பீடை அனுபவிக்கிறீர்கள் என்றாலும் சரி, அல்லது உங்கள் இருப்பிடத்தில் 3ஜி ஸ்பீடே மிகவும் நன்றாக இருக்கிறது என்றாலும் சரி.. பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டமானது உண்மையிலேயே ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!
தினமும் ரூ.4 என்கிற செலவில் 2ஜிபி டெய்லி டேட்டா!
முன்னரே குறிப்பிட்டபடி பிஎஸ்என்எல்-ன் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இது தினமும் 2ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது தோராயமாக தினமும் ரூ.4 என்கிற செலவின் கீழ் உங்களுக்கு 2ஜிபி அளவிலான டெய்லி டேட்டா - ஒரு ஆண்டு முழுவதும் - கிடைக்கும்!
டெய்லி டேட்டா தீர்ந்த பிறகு என்ன ஆகும்?
2ஜிபி என்கிற தினசரி டேட்டா வரம்பை மீறிய பிறகு, அதாவது 2ஜிபி டேட்டாவும் தீர்ந்த பிறகு உங்களுக்கு 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கிடைக்கும். இது வாட்ஸ்அப் வழியாக மெசேஜ்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதாவது பிஎஸ்என்எல் ரூ.1515-ஐ "தொழில்நுட்ப ரீதியாக" அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் திட்டமென்றே கூறலாம்!
யாரெல்லாம் பிஎஸ்என்எல் ரூ.1515 திட்டத்தை நம்பி ரீசார்ஜ் செய்யலாம்?
அன்லிமிடெட் வாய்ஸ் கால், நேஷனல் ரோமிங் மற்றும் இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளெல்லாம் வேண்டாம். வெறுமனே டேட்டா நன்மைகள் மட்டுமே போதும் என்கிறவர்கள் ரூ.1515-ஐ கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டம் பிஎஸ்என்எல்-ன் பெரும்பாலான தொலைத்தொடர்பு வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இருப்பினும், உங்கள் வட்டத்தில் ரூ.1515 உள்ளதா, இல்லையா என்பதை பிஎஸ்என்எல் ஆப் அல்லது இணையதளம் வழியாக சரிபார்க்கவும்.
பிஎஸ்என்எல் 4ஜி எப்போது அறிமுகமாகும்?
சமீபத்தில் அரசு அதிகாரி ஒருவரின் வழியாக வெளியான தகவலின்படி, வருகிற ஏப்ரல் 2023 இல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையின் வணிக வெளியீடு நடக்கலாம். முன்னதாக இது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகமானது நாம் நினைப்பதை விட விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது!


Click it and Unblock the Notifications








