Jio, Airtel துண்ட காணோம் துணிய காணோம்.. புது BSNL சிம் வாங்கினா.. மாதாந்திரம் ரூ.230 க்கு 13 மாத திட்டம்!
சில தினங்களுக்கு முன்பு தான் பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவைகளை அறிமுகம் செய்டது இருந்தாலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் சேவை (BSNL Bharat Fibre Service) ஆனது - இந்தியாவின் முன்னணி பிராட்பேண்ட் சேவைகளில் ஒன்றாக உள்ளது.
பிஎஸ்என்எல் அதன் பாரத் ஃபைபர் சேவையின் கீழ், கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அதிவேக வயர்டு இண்டர்நெட் கனெக்ஷனை (High-speed wired internet connection) வெற்றிகரமாக வழங்கிவருவதகு பின்னால் - சில சுவாரசியமான திட்டங்கள் மற்றும் சலுகைகள் உள்ளன!

அதில் ஒன்று தான் - பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ரூரல் எப்டிடிஎச் வாய்ஸ் அன்லிமிடெட் பிளான் (Rural FTTH Voice Unlimited Plan). இந்த திட்டத்தின் விலை விலை 12 மாதங்களுக்கு ரூ.2,988 ஆகும்; கூடுதலாக 1 மாத இலவச சேவையும் கிடைக்கும். ஆக 13 மாதங்களுக்கு ரூ.2988 என்றால்.. தோராயமாக மாதாந்திர ரூ.230 என்கிற செலவின் கீழ் இது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ஆனால் இந்த திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு (New BSNL FTTH Customers) மட்டுமே கிடைக்கும். ரூ.2988 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது முதல் 10ஜிபி டேட்டாவிற்கு 25எம்பிபிஎஸ் வரையிலான ஸ்பீடை வழங்கும். அதன் பிறகு டேட்டா ஸ்பீட் 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தில் வரம்பற்ற டேட்டா பதிவிறக்கங்கள் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் நன்மைகளும் கிடைக்கும்.
இதேபோல மாதாந்திர ரூ.276 செலவில் 13 மாதங்களுக்கு கிடைக்கும் ஒரு திட்டமும் உள்ளது. அது எப்டிடிஎச் வாய்ஸ் அன்லிமிடெட் பிளான் (FTTH Voice Unlimited Plan) ஆகும். இந்த திட்டத்தின் விலை 12 மாதங்களுக்கு ரூ.3,588 ஆகும். இதுவும் கூடுதலாக ஒரு மாதம் இலவச சேவையை வழங்கும்; ஆக மொத்தம் 13 மாதங்களுக்கு கிடைக்கும்
ரூ.3,588 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை இது முதல் 20ஜிபி டேட்டாவிற்கு 25எம்பிபிஎஸ் வரையிலான ஸ்பீடை வழங்கும். அதன் பிறகு டேட்டா ஸ்பீட் 2எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் இந்த திட்டத்திலும் வரம்பற்ற டேட்டா பதிவிறக்கங்கள் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
இதற்கு அடுத்தபடியாக என்னென்ன திட்டங்கள் உள்ளன? 13 மாதங்களுக்கு ரூ.4,788 என்கிற விலையில் பைபர் ரூரல் ஹோம் வைஃபை பிளான் (Fibre Rural Home Wi-Fi Plan) திட்டம் உள்ளது. இது முதல் 1.4டிபி டேட்டாவிற்கு 40எம்பிபிஎஸ் வரையிலான ஸ்பீடை வழங்கும். அதன் பிறகு டேட்டா ஸ்பீட் 4எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அன்லிமிடெட் டேட்டா டவுன்லோட்ஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுடன் வரும் இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள தனிப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதற்கும் அடுத்தபடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஃபைபர் பேசிக் நியோ பிளானும் (Fibre Basic Neo Plan) உள்ளது. இந்த திட்டத்தின் விலை 12 மாதங்களுக்கு ரூ.5,388 ஆகும்; இதிலும் 1 மாத சேவை இலவசமாக கிடைக்கும்
இப்படியாக ரூ.7,188 க்கு ஃபைபர் பேஸிக் ஓடிடி பிளான் (Fibre Basic OTT Plan), ரூ.8,915 க்கு ஃபைபர் வேல்யூஸ் பிளஸ் பிளான் (Fibre Values Plus Plan) மற்றும் ரூ.11,988 க்கு சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் பிளான் (Super Star Premium Plus Plan) ஆகிய திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications