ஒரே பிஎஸ்என்எல் ரீசார்ஜ்.. 365 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. மிஸ் பண்ணாதீங்க..
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வால் பிஎஸ்என்எல் சிம் வாங்கி அதில் மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களில் பலர் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதேசமயம் ஏர்டெல், ஜியே, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் டேட்டா சலுகை கொடுத்து அசத்தி வருகிறது பிஎஸ்என்எல் .
பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கிவிட்டது. இனி வரும் மாதங்களில் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் வேலை செய்து வருகிறது. எனவே இப்போதே இந்நிறுவனத்தின் அதிக நாள் வேலிடிட்டி தரும் ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வைப்பது நல்லது. இப்போது இந்நிறுவனம் வழங்கும் ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid recharge plan) மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற போன்ற போன்ற நன்மைகள் பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் கிடைக்கும்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid recharge plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
அதேசமயம் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை உள்ளது. பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் இதில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








