BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களை தற்பொழுது வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் டெல்கோ தனது 4 ஜி சேவையை நாட்டில் உள்ள அனைத்து வேடங்களிலும் கிடைக்கும்படி இன்னும் விரிவாக்கவில்லை, இருப்பினும், சில வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு தற்பொழுது இந்த 4 ஜி திட்டங்கள் கிடைக்கிறது. சிறந்த 4 ஜி திட்டத்திற்கான பட்டியலை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

சிறந்த 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ஏராளமான 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள் தற்பொழுது பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், இதில் எது சிறந்த திட்டம் என்று தெரியாமல் உங்களுக்குத் தேவையில்லாத தவறான திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம் என்பதற்காக, பிஎஸ்என்எல் இல் கிடைக்கும் சிறந்த 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை உங்களுக்காக நாங்கள் உருவாக்கியுள்ளோம். அவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் திட்டம் 997
டேட்டா நன்மை மற்றும் குரல் அழைப்பு நன்மையுடன் நீங்கள் நீண்ட கால செல்லுபடியாகும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த ரூ.997 திட்டம் சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தினமும் 3ஜிபி டேட்டா நன்மை, ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் என 180 நாட்கள் வேலிடிட்டியுடன்வருகிறது. தினமும் 3ஜிபி டேட்டா 80 நாட்களுக்குக் கிடைப்பது என்பது சிறப்பு தானே.

பி.எஸ்.என்.எல் 1999
சிறந்த பிஎஸ்என்எல் 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில் இடம் பெற்ற மற்றொரு திட்டம் தான் ரூ.1999 திட்டம். இந்த திட்டத்தின் மூலம், பயனருக்கு 3 ஜிபி தினசரி டேட்டா, ஒவ்வொரு நாளும் 250 இலவச அழைப்பு நிமிடங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக EROS NOW-க்கான இரண்டு மாதங்களுக்கு இலவச சந்தா, லோக்தம் உள்ளடக்கம் மற்றும் இலவச காலர் டியூன் கிடைக்கிறது.

பி.எஸ்.என்.எல் எஸ்.டி.வி 599
வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் தினசரி தரவுகளின் அடிப்படையில் இது பிஎஸ்என்எல்லின் சிறந்த 4 ஜி ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் 5 ஜிபி தினசரி டேட்டா, ஒவ்வொரு நாளும் 250 நிமிட இலவச அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என 90 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

பிஎஸ்என்எல் திட்டம் 365
பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை திட்டமாகும். இந்த திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், மலிவான விலையில் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு (ஒரு நாளில் 250 நிமிடங்கள் வரை), தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் லோக்தம் உள்ளடக்கம் மற்றும் இலவச காலர் டியூன் ஆகியவை கிடைக்கிறது.

பி.எஸ்.என்.எல் எஸ்.டி.வி 187
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கக்கூடிய மிக குறைந்த விலை திட்டம் தான் இந்த ரூ .187 எஸ்.டி.வி திட்டம். குறுகிய காலத்திற்குச் சிறந்த 4 ஜி பயனை வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளில் 250 நிமிடங்கள் வரை இலவச அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சிறந்த நன்மைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications