5ஜி சேவை கொண்டுவரும் BSNL நிறுவனம்.. சோதனை தொடங்கியது.. எங்கு தெரியுமா?
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் குறித்து செய்தி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்நிறுவனம் நாட்டில் பல முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்நிலையில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நேரு பிளேஸ், சாணக்கியபுரி மற்றும் மின்டோசாலை ஆகிய பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி (5G) சேவையின் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் தங்களுடைய நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வேகப்படுத்தி வருகிறது. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் மார்ச் 2025-க்குள் 100000 டவர்களை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. குறிப்பாக அக்டோபர் மாதத்திற்குள் 80,000 டவர்களை அமைக்கும் பணி முடிவடையும் என தெரிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
குறிப்பாக இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனர்கள் வேகமான இணைய சேவைகளைப் பெற முடியும். மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது அரசு. அதாவது 4ஜி மற்றும் 5ஜி சேவை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ்என்எல் 4ஜி சேவை நாடு முழுவதும் கிடைக்கும் என்றும், பின்பு இதன் 5ஜி சேவை அடுத்த ஆண்டு இறுதியில் கிடைக்கத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் நாடு முழுவதும் வழங்கிவிட்டால் இன்னும் அதிக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைய வாய்ப்பு உள்ளது. சரி இப்போது நிறுவனம் வைத்துள்ள சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். மேலும் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications