Home
News

வரம்பற்ற வாய்ஸ் + அன்லிமிடெட் டேட்டா: பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் புரட்சி.!

பிஎஸ்என்எல் அதன் பிபிஜி காம்போ யூஎல்டி 1199 திட்டத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன மாற்றம்.? இந்த திருத்தத்திற்கு பிந்தைய நன்மைகள் என்ன.?

By Muthuraj

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய தொலைத் தொடர்பு துறையில் நடக்கும் கட்டண யுத்தத்திற்கு ஈடுகொடுக்குமொரு சிறப்பான நிலைப்பாட்டில் உள்ளது.

வரம்பற்ற வாய்ஸ்+அன்லிமிடெட் டேட்டா: பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புரட்சி.!

பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்றே தனியார் நிறுவனங்களுக்கு இணையாக திட்டங்களையும், சலுகைகளையும் மற்றும் கட்டண திருத்தங்களையும் வழங்கி வரும் பிஎஸ்என்எல் சமீபத்தில் எஸ்டிவி 1099 என்கிற வரம்பற்ற குரல் மற்றும் தரவு திட்டத்தை மறுசீரமைத்து அறிவித்தது. அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் அதன் பிபிஜி காம்போ யூஎல்டி 1199 திட்டத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதென்ன மாற்றம்.? இந்த திருத்தத்திற்கு பிந்தைய நன்மைகள் என்ன.?

கண்ணியமான அளவிலான டேட்டா

கண்ணியமான அளவிலான டேட்டா

திருத்தப்பட்ட இந்த பிஎஸ்என்எல் ரூ.1199/- ஆனது, இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவச குரல் அழைப்புகளை வழங்குவதையே இலக்காகக் கொண்ட ஒரு பிராட்பேண்ட் திட்டமாகும். இருப்பினும் இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு கண்ணியமான அளவிலான டேட்டா நன்மையையும் வழங்குகிறது.

அதிவேக தரவை வழங்குகிறது

அதிவேக தரவை வழங்குகிறது

அதாவது பிபிஜி காம்போ யூஎல்டி 1199 பிராட்பேண்ட் திட்டமானது, 10 ஜிபிஎஸ்பிஎஸ் என்கிற வேகத்திலான 40ஜிஇ அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது. டேட்டா வரம்பு (40 ஜிபி) முடிந்த பின்னர் இணைய (பதிவிறக்க) வேகமானது 2 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

24 மணி நேரமும் வரம்பற்ற குரல் அழைப்பு

24 மணி நேரமும் வரம்பற்ற குரல் அழைப்பு

அப்படியாக, 2 எம்பிபிஎஸ் அளவிலான வேகத்தில் கிடைக்கும் தரவிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதாவது வாடிக்கையாளர்கள் எவ்வளவு அளவிலான தரவுகளையும் வரம்பற்ற முறையில் எடுத்துக்கொள்ள முடியுமென்று அர்த்தம். உடன் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் 24 மணி நேரமும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

மற்ற பிராட்பேண்ட் திட்டங்களில்

மற்ற பிராட்பேண்ட் திட்டங்களில்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மற்ற பிராட்பேண்ட் திட்டங்களில், குரல் அழைப்பு நன்மைகளானது சில மணிநேரங்களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்ற வரம்பை கொண்டிருக்கும்.
முன்னதாக பிஎஸ்என்எல், ஞாயிற்றுக்கிழமைகளில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி கொண்டிருந்தது. சமீபத்தில் அதுவும் திருத்தப்ப்பட்டதாக அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனம் அறிவித்தது.

இன்னும் புதுப்பிக்கப்படவில்லை

இன்னும் புதுப்பிக்கப்படவில்லை

குறிப்பிடத்தக்க வண்ணம், இந்த பிபிஜி காம்போ 1199 யூஎல்டி திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றமானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை, விரைவில் அப்டேட் செய்யப்படலாம். தவிர, பிஎஸ்என்எல் அதன் பயனர்கள் இந்த திட்டத்தினை ஆண்டு கணக்கில் கட்டணம் செலுத்தவும் அனுமதிக்கின்றது. இந்த வாய்ப்பில் வாடிக்கையாளர்களுக்கு சில தள்ளுபடிகளையும் வழங்குகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் இந்த திட்டத்தை வருடாந்திர கணக்கில் பயன்படுத்தினால், ஆண்டுக்கு ரூ.14388/-க்கு பதிலாக ரூ.13,189/- செலுத்தினால் போதும், அதாவது 11 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும். அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு என்றால் ரூ.25,179 மற்றும் மூன்று வருடங்களுக்கு என்றால் ரூ.35,970/- செலுத்தினால் போதும்.

Best Mobiles in India

English summary
BSNL BBG Combo ULD 1199 Revised. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X