BSNL-க்கு நல்ல காலம் வந்தாச்சு.. கடந்த 20 நாட்களில் 1 லட்சம் சிம் கார்டுகள் விற்பனை.. 4G வருது.. விவரம் இதோ..
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியதால் தற்போது பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் (BSNL) சிம் வாங்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கூட மலிவு விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்கி வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பலர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களில் 1 லட்சம் சிம் கார்டுகளை மக்கள் வாங்கியுள்ளனர். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) மாநிலத்தில் கடந்த 20 நாட்களில் சுமார் 1 லட்சம் சிம் கார்டுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த தகவல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியானது.

ஆந்திராவில் தற்போது சில முக்கியமான இடங்களில் 4G சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அந்த மாநிலம் முழுவதும் 4ஜி சேவை வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் விரைவில் 4ஜி சேவை கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 599 prepaid recharge plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம். மேலும் ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 769 prepaid recharge plan) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம். ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music)உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவை கொண்டுவந்து, மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வந்தால் இன்னும் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்குவார்கள். இந்நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








