Home
News

அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. பட்ஜெட் விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி.. சிறந்த பிஎஸ்என்எல் திட்டங்கள்!

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது ஒரு வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் மூன்று பிஎஸ்என்எல் திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. சிறந்த பிஎஸ்என்எல் திட்டங்கள்!

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2499 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆகவே இந்த பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2499 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். தற்போது பிஎஸ்என்எல் ரூ.2449 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு கூடுதல் சலுகையை வழங்கி உள்ளது.

அதன்படி இந்த திட்டத்தில் தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) மற்றும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் (Cyber Insurance Coverage) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் விபத்து காப்பீடு ரூ.1 லட்சத்துக்கு மட்டுமெ செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்து, தீ காயம், பாம்புக்கடி, மின்னல் தாக்குதல் மற்றும் மின்சார தாக்குதல் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ரூ.10 ஆயிரத்துக்கு கிடைக்கும் சைபர் இன்சூரன்ஸ் கவரேஜிலும் குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன.

அதாவது சைபர் திருட்டு, ஃபிசிங், ஈ-மெயில் ஸ்பூஃபிங் ஆகியவற்றுக்கு பொருந்தும். இதுபோன்று சைபர் பாதிப்புக்குள்ளான 7 நாட்களில் புகார் தெரிவிக்க வேண்டும். ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்துக்கு பிறகு இருந்தே இந்த சைபர் இன்சூரன்ஸ் கவரேஜ் ஆக்டிவாக கருதப்படும். வருடத்துக்கு 3 முறை கிளைம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. சிறந்த பிஎஸ்என்எல் திட்டங்கள்!

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Annual Recharge Plans: 365 Day Validity and Unlimited Calling Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X