Home
News

BSNL ரீசார்ஜ் பண்ண போறீங்களா.. 365 நாள் வேலிடிட்டி, தினமும் 3GB டேட்டா.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் எனப் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது பல லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL ரீசார்ஜ் பண்ண போறீங்களா.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid plan) ஆனது மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இதில் உள்ளது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டாவை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. ஒருவேளை 365 நாட்கள் விட அதிக வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

BSNL ரீசார்ஜ் பண்ண போறீங்களா.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Annual Prepaid Plans with 365 Days Validity and Unlimited Offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X