Home
News

ஒரு முறை ரீசார்ஜ்.. ஒரு வருடத்திற்கு நிம்மதி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் BSNL..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியாக புதிய திட்டங்கள் மற்றும் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது பிஎஸ்என்எல் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் 3 திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஒரு முறை ரீசார்ஜ்.. ஒரு வருடத்திற்கு நிம்மதி.. அள்ளி தரும் BSNL..

ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2626 Prepaid Plan) தினமும் 2.6ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 949ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2.6ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2626 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஒரு முறை ரீசார்ஜ்.. ஒரு வருடத்திற்கு நிம்மதி.. அள்ளி தரும் BSNL..

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி விலையில் ஒரு வருடம் வேலிடிட்டி தரும் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல். எனவே ஒரு வருடம் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. மேலும் இந்நிறுவனம் கூடிய விரைவில் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Annual Prepaid Plans for 2026 Announced: Check Price, Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X