Home
News

2026 முழுவதும் வேலிடிட்டி.. BSNL வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினசரி டேட்டா..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதுவும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தான் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனத்தின 4ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வருடம் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், 2026 முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய திட்டம் மற்றும் அதை எப்போது ரீசார்ஜ் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2026 முழுவதும் வேலிடிட்டி..  BSNL வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்..

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது.

எப்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும்?
ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் இருக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31, 2025 அன்று பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்போது தான் 2026-ம் ஆண்டில் 365 நாட்களும் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஒருவேளை கம்மி பட்ஜெட்டில் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.485 மற்றும் 599 ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 144ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

2026 முழுவதும் வேலிடிட்டி..  BSNL வருடாந்திர ரீசார்ஜ் திட்டம்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bsnl annual plan come with unlimited calling and 4G data valid till the end of 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X