பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா?
இதற்கு முன்பு பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் கூடுதலான டேட்டா நன்மையை அறிவித்தது, அதன்படி இந்த தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 27-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு நடுத்தர மக்களுக்க பயன்படும் வகையில் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் இந்த திட்டத்திற்கு போட்டியாக மற்ற டெலிகாம் நிறுவனங்கள் புதிய திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அறிவித்த ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் கால் அழைப்புகள், பின்பு 300எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டள்ளது.

ஜியோ:
குறிப்பாக ஜியோவின் ரூ.52 திட்டத்திற்கு போட்டியாக தான் பிஎஸ்என்எல் தனது 27 திட்டத்தை அறிமுகம் செய்தது, ஜியோவின் ரூ.52-திட்டதில் தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் 70எஸ்எம்எஸ், பின்பு அன்லிமிட்டெட் கால் அழைப்புகள் போன்றவை 7நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் வோடபோன்:
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கும் ரூ.47 திட்டத்தில் தினசரி 50எஸ்எம்எஸ் மற்றும் 500எம்பி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிட்த்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டம் :
இதற்கு முன்பு பிஎஸ்என்எல் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் கூடுதலான டேட்டா நன்மையை அறிவித்தது, அதன்படி இந்த தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 54 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தில் 54ஜிபி டேட்டா கிடைக்கிறது. பின்பு இலவச வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.155 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.155 திட்டத்தில் இதற்குமுன்பு 1.5ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் வழஙக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 28 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.198 திட்டத்தில் இதற்குமுன்பு 1ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications