யாரெல்லாம் பிஎஸ்என்எல்-ஐ கேலி செஞ்சீங்க; இந்த அறிவிப்பை படிங்க முதல்ல.!

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ஜியோவின் அதிரடியான கட்டண திட்டங்களை பற்றியெல்லாம் பெரிதளவில் கவலைகொள்ளாத அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்..

|

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ஜியோவின் அதிரடியான கட்டண திட்டங்களை பற்றியெல்லாம் பெரிதளவில் கவலைகொள்ளாத அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தொடர்ச்சியான முறையில் இந்தியா முழுவதும் அதன் நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் அதன் பிராட்பேண்ட் திட்டங்களில் இரண்டு பிரதான மாற்றங்களை அறிவித்துள்ளது.

நேற்று (ஜூன் 1, 2018) முதல் செயல்பட தொடங்கியுள்ளது.!

நேற்று (ஜூன் 1, 2018) முதல் செயல்பட தொடங்கியுள்ளது.!

அது என்ன.? இனி கீழ் குறிப்பி ட்டுள்ள பிராட்பேண்ட் திட்டங்களின் நன்மைகள் தான் என்ன.? என்பதை பற்றி விரிவாக காண்போம். நிறுவனத்தின் உண்மையான வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் நேற்று (ஜூன் 1, 2018) முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே சேவையின் கீழ் இருக்கும் பயனர்களுக்கு மட்டுமின்றி, புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது சிறப்பம்சம்.

முதல் மாற்றம்.!

முதல் மாற்றம்.!

முதல் மாற்றமானது, ரூ.645/- அல்லது அதற்கு மேற்பட்ட பிராட்பேண்ட் திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு, இனி எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள் அணுக கிடைக்கும். மற்றும் ரூ.249/-ல் தொடங்கி ரூ.645/-க்குள்ளான பிராட்பேண்ட் திட்டத்தில் இருக்கும் பயனர்களுக்கு, இனி நாட்டில் உள்ள எந்த பிஎஸ்என்எல் எண்ணிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் அணுக கிடைக்கும்.

அனைத்து FTTH பிராட்பேண்ட் காம்போ பிளான்களிலும்.!

அனைத்து FTTH பிராட்பேண்ட் காம்போ பிளான்களிலும்.!

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, ரூ.645/-க்கு மேல் விலை நிர்ணயம் பெற்றுள்ள அனைத்து FTTH பிராட்பேண்ட் காம்போ பிளான்களிலும், இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கின் கீழும் வரம்பற்ற இலவச அழைப்பு (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) நன்மைகள் கிடைக்கும் என்கிற மாற்றம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக, சில வட்டாரங்களுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பிராட்பேண்ட் திட்ட நன்மைகள் ஆனது, இன்று தொடங்கி நாட்டில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இடையான குரல் அழைப்பு நன்மையை வழங்க தொடங்கும்.

இரண்டாம் மாற்றம்.!

இரண்டாம் மாற்றம்.!

இரண்டாவது மாற்றமானது, பான் இந்தியா அடிப்படையின் கீழ் இந்தியாவில் உள்ள பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளில் ரூ.249 மற்றும் ரூ.645/- ஆகிய திட்டங்களுக்கு இடையே விலை நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களுக்கு வரம்பற்ற இலவச அழைப்பு (உள்ளூர் + எஸ்டிடி) நன்மைகளை வழங்குவதாகும். இப்போது வரையிலாக, ​​இந்த திட்டங்கள் சில வட்டங்களுக்குள் மட்டுமே இலவச குரல் அழைப்பை வழங்குகின்றன. ஆனால் இனி இந்த திட்டங்களை கொண்டிருக்கும் பயனர் பான் இந்தியா அடிப்படையில் வரம்பற்ற குரல் அழைப்புகளை செய்ய முடியும்.

நேர வரம்பில் நீட்டிப்பு.!

நேர வரம்பில் நீட்டிப்பு.!

இந்த இரண்டு மாற்றங்களையும் தவிர்த்து, பிஎஸ்என்எல் அதன் வரம்பற்ற இலவச அழைப்புக்கான நேர வரம்பு நீடிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்தது. அதாவது வார நாட்களில் இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும் என்று நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டி நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை, அது பான் இந்தியா அல்லது குறிப்பிட்ட வட்டம் அல்லது FTTH பிராட்பேண்ட் காம்போ திட்டத்தை பொறுத்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக.!

இதற்கு முன்னதாக.!

பைபர் கனெக்ஷன் ஆதரவுடன், அதன் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் FTTH திட்டங்களை நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் வழங்கி வரும் பிஎஸ்என்எல், சமீபத்தில் அந்த திட்டங்கள் ஒரு பிரதான மாற்றத்தை நிகழ்த்தியது. அதாவது இனி இந்த திட்டங்களின் கீழ் 100 Mbps வேகம் கிடைக்கும். இந்த மாற்றமானது சில வட்டங்களில் மட்டுமே உருட்டப்பட்டுள்ளது, அதில் சென்னையும் ஒன்றாகும். குறிப்பாக ரூ.4,999 FTTH திட்டத்தில் சில மாற்றங்கள் செலுத்தப்பட்டுள்ளது.

போதுமானதாக இருக்கும்.!

போதுமானதாக இருக்கும்.!

சென்னை வட்டத்தில் கிடைக்கும் FTTH திட்டங்களில் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களை பொறுத்தவரை, இனி 100 Mbps வேகத்திலான 1500 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அந்த வரம்பு முடிந்த பின்னர், 2 Mbps வேகத்திலான இணையத்தைப் பயன்படுத்த முடியும். இது வீடியோ ஸ்ட்ரீமிங், சோஷியல் மீடியா ப்ரவுஸிங் ஆகியவைகளுக்கு போதுமானதாக இருக்கும். வழக்கமான டேட்டா மற்றும் வரம்புகளை தவிர்த்து, 5 எம்பி அளவிலான ஸ்பேஸ் கொண்ட ஒரு இலவச மின்னஞ்சல் ஐடியையும் பயனர்கள் பெறுவார்கள்.

கூடுதல் கட்டணங்களும் இருக்காது.!

கூடுதல் கட்டணங்களும் இருக்காது.!

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த திட்டங்களின் வழியாக, பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் இலவச அழைப்புகளும் கிடைக்கும். ஒதுக்கப்பட்டுள்ள நிமிடங்களை கடந்த பின்னரும் கூட, பிஎஸ்என்எல் வட்டத்திற்குள் நிகழும் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணங்களும் இருக்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து FTTH திட்டங்களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.!

அனைத்து FTTH திட்டங்களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.!

ரூ.4,999 FTTH தவிர, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஐந்து FTTH திட்டங்கள் அணுக கிடைக்கின்றன. அது ரூ.999 முதல் ரூ.2999/- வரை நீள்கிறது. ரூ.4999/- ஆனது பிரீமியம் BSNL FTTH திட்டம் ஆகும். இந்த சமீபத்திய திருத்தம் ஆனது பிஎஸ்என்எல்-ன் அனைத்து FTTH திட்டங்களிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேட்டா வரம்பில் மாற்றங்கள் இருக்கும்.!

டேட்டா வரம்பில் மாற்றங்கள் இருக்கும்.!

சென்னையில் கிடைக்கும் ரூ.999 FTTH பிராட்பேண்ட் திட்டமானது, இப்போது 60 Mbps பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் 250 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.1299, ரூ.1699, ரூ.1999 மற்றும் ரூ.2999 பிராட்பேண்ட் திட்டங்கள் ஆனது 80 Mbps என்கிற பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தினை வழங்குகின்றன. ஆனால் டேட்டா வரம்பில் மாற்றங்கள் இருக்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
அனைத்து ஆறு திட்டங்களுமே.!

அனைத்து ஆறு திட்டங்களுமே.!

அதாவது ரூ.1299 திட்டமானது 400 ஜிபி அளவிலான டேட்டாவையும், ரூ.1699/- திட்டமானது 550 ஜிபி அளவிலான டேட்டாவையும், ரூ.1999/- மற்றும் ரூ.2999/- திட்டங்கள் ஆனது முறையே 800 ஜிபி மற்றும் 900 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இந்த அனைத்து ஆறு திட்டங்களுமே, வரம்பிற்கு பின்னர் 2 Mbps என்கிற வேகத்தின் கீழ், வரம்பற்ற டேட்டாவை வழங்கும்.

ஆக்ட்பைபர் சேவைகள் மீதான கடும் போட்டி.!

ஆக்ட்பைபர் சேவைகள் மீதான கடும் போட்டி.!

பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள, இந்த FTTH திட்டங்கள் மீதான திருத்தம் ஆனது, நிச்சயமாக தனியார் நிறுவனமான ஆக்ட்பைபர் சேவைகள் மீதான கடும் போட்டியை உண்டாகும். மேலும் பல ரீசார்ஜ் திட்டங்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Announces True Unlimited Voice Calling on a Slew of Broadband Plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X