Home
News

சத்தமில்லாமல் இரண்டு திட்டங்களில் அசத்தலான சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனாலும் பிஎஸ்என்எல் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவை வழங்கினால் நல்ல வரவேற்பு இருக்கும்.

 பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 மற்றும்

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 மற்றும் ரூ.198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக
இந்த திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் கண்டிப்பாக பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 45 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கியது, ஆனால் தற்போது 50 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் இந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கு பதிலாக இலவச லோக்தூன் உள்ளடக்கத்துடன் வருகிறதுஇந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது, ஆனால் தற்சமயம் இந்த திட்டததில் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மையை பெற முடியும். இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டு சந்தாவை இந்த திட்டத்தில் பெறமுடியும். மேலும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்குமுன்பு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த சில ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப்
பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் ஆனது தற்சமயம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ரூ.108 ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

 பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா போன்ற நன்மைகள் 60 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவசஎஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்
பயனர்களுக்கு 60 நாட்கள் வரை மட்டுமே இலவச நன்மைகள் கிடைக்கும் என்றும். மேலும் 60 நாட்கள் முடிந்த பின்பு உங்களுக்கு டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல வவுச்சர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL announces offers on Rs 198 and Rs 499 prepaid plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X