ரூ.499-/விலையில் பிஎஸ்என்எல் டீடெல் டி1 பீச்சர்போன் அறிமுகம்.!
இந்த டீடெல் டி1 பீச்சர்போனுடன் ரூ.153-விலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த மொபைல் போன் கட்டணம் ரூ.349 மற்றும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.153 சேர்த்தே வசூலிக்கப்படும்.
இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக டீடெல் டி1 என்ற பீச்சர் போன் மாடலை குறைந்ம விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டீடெல் டி1 பீச்சர்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டீடெல் டி1 பீசசர்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.499-ஆக உள்ளது, அதன்பின்பு பிஎஸ்என்எல் வாய்ஸ் கால்களும் இதனுடன் வழங்கப்படுகிறது.

சிறப்பு சலுகை:
இந்த டீடெல் டி1 பீச்சர்போனுடன் ரூ.153-விலையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த மொபைல் போன் கட்டணம் ரூ.349 மற்றும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.153 சேர்த்தே வசூலிக்கப்படும். மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்த பீச்சர்போனின்அறிமுக நிகழ்சியில் கலந்து கொண்டார்.

365 நாட்கள்:
டீடெல் டி1 பீச்சர்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.103-டாக்டைம் சுமார் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது,
அதன்பின்பு இந்த சிறப்பு சலுகை பொறுத்தவரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மற்ற பிஎஸ்என்எல் எண்களுக்கு 15 பைசா கட்டணத்தில் பேசமுடியும். மற்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் கால்அழைப்புகளுக்கு நொடிக்கு 50பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீடெல் டி1:
இந்த டீடெல் டி1 பீச்சர்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல்-பிஎஸ்என்எல் 686 அழைப்புகள், மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 257 நிமிடங்கள் என வழங்கப்படுகிறது.

டிஸ்பிளே:
டீடெல் டி1 பீச்சர்போன் சாதனம் பொறுத்தவரை 1.44-இன்ச் மோனோகுரோம் டிஸ்பிளே மற்றும் கீபபேட் வசதிகள் உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த பீச்சர்போன் மாடல்.

பேட்டரி:
இந்த பீச்சர்போன் சாதனத்தில் 650எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றில் 4ஜி வசதி கிடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
ஸ்பீக்கர், டார்ச், போன்புக் மற்றும் வைப்ரேஷன் மோட், எஃப்.எம். ரேடியோ போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளதுடீடெல் டி1 பீச்சர்போன்.


Click it and Unblock the Notifications