Home
News

உற்சாகத்தில் BSNL பயனர்கள்.. கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் தற்போது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ.347, ரூ.485 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது இந்த திட்டங்களில் வழங்கப்பட்ட சலுகைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347, ரூ.485 மற்றும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டங்கள் முன்பு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை 2026 ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்க்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

உற்சாகத்தில் BSNL பயனர்கள்.. கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 485 Prepaid Plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 180ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்

உற்சாகத்தில் BSNL பயனர்கள்.. கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு..

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 2.5ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆகவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 125ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி உள்ள இந்த புதிய சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

photo credits: bsnl, BSNLCorporate, X

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL announces additional data offer on Rs.347, Rs. 485 and Rs. 2399 prepaid plans: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X