2 திட்டங்களில் மொத்த பேரின் வாயை அடைத்த BSNL.. கம்மி விலையில் இவ்வளவு சலுகையா!

|

BSNL நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை ரூ.269 மற்றும் ரூ.769 ஆகும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் முழுமையான மாதாந்திர திட்டத்தை வழங்குகிறது.

ஒரு மாதத் திட்டம் என்று குறிப்பிட்டு 28 நாட்கள் என்றும் மூன்று மாதத் திட்டம் என்று குறிப்பிட்டு 84 நாட்கள் என்றும் வழங்காமல் முழுமையாக மாதாந்திரத் திட்டமாக இருக்கிறது.

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள ரூ.269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 30 நாட்கள் செல்லுபடி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் ட்யூன்களும் தொகுத்து வழங்கப்படுகிறது.

இதன்மூலம் பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் பாடல்களை கேட்கலாம். பிஎஸ்என்எல் எஸ்டிவி769 திட்டம் ஆனது எஸ்டிவி269 பிளான் போன்றே இருக்கிறது.

STV269 மற்றும் STV769 திட்டம்

STV269 மற்றும் STV769 திட்டம்

பிஎஸ்என்எல் STV269 மற்றும் STV769 திட்டமானது முறையான வேலிடிட்டி நாட்களை வழங்குகிறது. இந்த திட்டமானது முழுமையான மாதாந்திர திட்டமாகும், இந்த இரண்டு திட்டங்களும் முறையே 30 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

அதிக டேட்டாவை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டமும் சிறந்தத் தேர்வாக இருக்கும். திட்டங்களின் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

BSNL STV269 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL STV269 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL STV269 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 30 நாட்கள் செல்லுபடியாகும் இதில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. BSNL ட்யூன் பேக்குகளும் இந்த திட்டத்தில் தொகுத்து வழங்கப்படுகிறது.

இது பயனர்களை எந்த வரம்பும் இல்லாமல் பாடல்களை கேட்க அனுமதிக்கிறது.

ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல பயன்பாட்டு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

BSNL STV769 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL STV769 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL STV769 ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.269 போன்ற நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த திட்டம் ரூ.769 விலையில் கிடைக்கிறது.

இதன்மூலம் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 90 நாட்கள் செல்லுபடியாகும்.

முழுமையான 30 நாட்கள் வேலிடிட்டி

முழுமையான 30 நாட்கள் வேலிடிட்டி

இந்த இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களும் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முழுமையான 30 நாட்கள் வேலிடிட்டித் திட்டத்தை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள திட்டங்களே இதுவாகும் என கூறப்படுகிறது.

எப்போது 4ஜி, 5ஜி?

எப்போது 4ஜி, 5ஜி?

இதெல்லாம் சரி, 4ஜி சேவை எப்போது நாடு முழுவதும் அறிமுகமாகும், இந்தியாவில் 5ஜி அறிமுகமாகிவிட்டதே இது எப்போது பிஎஸ்என்எல் பயனர்களுக்கு கிடைக்கும் எனற கேள்வு வருகிறதா?. இதற்கான பதில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை..

இந்தியாவில் 5ஜி சேவை..

இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் அக்டோபர் 1 முதலே தொடங்கி இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில் இருக்கும் ஜியோவும் சைலண்டாக தனது 5ஜி சேவையை தொடங்கி இருக்கிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என விஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் சரி, அந்த பிஎஸ்என்எல் நிலை என்னப்பா என்றால், இதோ அதை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி), பி கே பூர்வார் இதுகுறித்து கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி கிடைக்கும் என உறுதியளித்தார். அதாவது அடுத்த மாதம் முதல் 4ஜி சேவை கிடைக்க இருக்கிறது. அதேசமயத்தில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கிடைக்கத் தொடங்கும் என்ற மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பை பூர்வார் உறுதி செய்தார்.

Best Mobiles in India

English summary
BSNL Announced Two Prepaid Plans At Rs.269 and Rs.769 With Daily 2GB Data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X