மோதி பார்க்கும் பிஎஸ்என்எல்- அட்டகாச மூன்று திட்டங்கள் அறிமுகம்: வரம்பற்ற டேட்டா, குரலழைப்பு!
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பல்வேறு வட்டங்களில் உள்ள அதன் சந்தாதாரர்களுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் வவுச்சர்களை அறிமுகப்படுத்துவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. சலுகை காலத்தில் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் மூன்று வவுச்சர்கள்
பிஎஸ்என்எல் மூன்று வவுச்சர்களை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் ரூ.139, ரூ.201 மற்றும் ரூ.1,199 என்ற விலையில் வருகிறது. பிஎஸ்என்எல் இந்த நடவடிக்கையானது தொலைத் தொடர்பு சந்தைகளில் உள்ள பிற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.201 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலத்திற்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 300 நிமிட அழைப்பு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 6 ஜிபி டேட்டா மற்றும் 99 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. அழைப்பு மற்றும் தரவை சிக்கனமாக பயன்படுத்தும் நபர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம் டெல்லி மற்றும் மும்பை உட்பட அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். இது 80 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். மாதாந்திர திட்டம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.

பிஎஸ்என்எல் புதிய திட்டம் ரூ.1,199
பிஎஸ்என்எல் புதிய திட்டம் ரூ.1,199 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இது வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது. முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் கவர்ச்சிகரமான சலுகை என்னவென்றால் இது ஒரு ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும். அதிக தரவு பயன்படுத்தாமல் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் சாதாரன மொபைல் பயனர்களுக்கு சிறந்த தேர்வாகும்.

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள்
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள் தங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு இந்த திட்டம் செல்லுபடியாகும் விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். *123# என்ற எண்ணை டயல் செய்யலாம்.பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பல்வேறு வட்டங்களில் உள்ள அதன் சந்தாதாரர்களுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகிறது.

சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல்லின் சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்று இந்த வட்டத்தில் தொடங்கப்பட்ட பிவி 102 திட்டம் ஆகும். இந்த திட்டம் எந்த தரவு நன்மையுடனும் வராது. ஆனால், குரல் அழைப்பு நன்மையைப் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு சரியான நுழைவை உருவாக்குகிறது. இந்த திட்டத்தின் படி சந்தாதாரர்கள் ரூ. 102 விலையில் 30 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையைப் பெறுகிறார்கள்.

ரூ 143 ப்ரீபெய்ட் திட்டம்
அதே வரிசையில் உள்ள மற்றொரு திட்டம் ரூ 143 ப்ரீபெய்ட் திட்டமாகும், இது பிவி 143 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், கடந்த திட்டத்தை போலல்லாமல், தரவு நன்மையையும் வழங்குகிறது. சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றை 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் பயன்படுத்தலாம். ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ .199 விலையில் இதே நன்மையை வெறும் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications