Home
News

புத்தம் புதிய சேவையை முதல்முறையாக வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் மக்களிடம் அதிக வரவேற்ப்பு உள்ளது.

 பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக்

இந்நிலையில் பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனங்கள் இணைந்து உலகில் முதல்முறையாக செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை இந்தியாவில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 கடல் பகுதிகள், காஷ்மீர் முதல்

அதாவது இந்த சேவையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு இந்திய கடல் பகுதிகள்,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் குஜராத் முதல் வட கிழக்கு இந்திய எல்லைகளுக்குள் சீரான இணைய வசதி வழங்கப்படஇருக்கிறது.

வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும்

தற்போது இந்த சேவை ஆனது கனரக வாகனங்கள், வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும் மீன்படி படகுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் செல்லுலார் கிரேடு ஹார்டுவேர் கொண்டு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது.

தொழில்நுட்பத்தை கொண்டு அதிக

இந்த புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதிக தரமான சேவையினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என்று ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இதன் மூலம் இந்தியா முழக்க இணைய சேவையை அனைவருக்கும் வழங்க முடியும். மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சிறந்த திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் STV 97

பிஎஸ்என்எல் STV 97

இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.97-ஆக உள்ளது. குறிப்பாக 18 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஓவ்வொரு நாளும் 250 நிமிட வரம்பற்ற அழைப்பையும் 2 ஜிபி தினசரி டேட்டாவையும் கூடுதலாக தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். பின்பு இந்த திட்டம் வழங்கும் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பின்பு இணைய வேகம் 80 Kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் டேட்டா WFH_151

பிஎஸ்என்எல் டேட்டா WFH_151

பிஎஸ்என்எல் டேட்டா டபிள்யூஎஃப்எச்_151 திட்டத்தின் மதிப்பு ரூ.151-ஆக உள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. பின்பு 28 நாட்களுக்கு ஜிங்கின் இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் டேட்டா STV_198

பிஎஸ்என்எல் டேட்டா STV_198

பிஎஸ்என்எல் டேட்டா STV_198 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளிவான டேட்டா, இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் டோன் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அதேபோல் தினசரி டேட்டா அளவை மீறிய பின்னர் இணைய வேகம் 40 Kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் டேட்டா WFH_251

பிஎஸ்என்எல் டேட்டா WFH_251

பிஎஸ்என்எல் டேட்டா WFH_251 திட்டமானது 70 ஜிபி அளவிலான டேட்டாவையும், ZING மீதான இலவச சந்தாவையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் டேட்டா STV_998

பிஎஸ்என்எல் டேட்டா STV_998

பிஎஸ்என்எல் டேட்டா STV_998 திட்டமானது 300 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் பயனர்களுக்கு 2ஜிபி அளவிலான டேட்டா, 2 மாதங்களுக்கு இலவச ரிங் டோன், இலவச லோக்தூம் கன்டென்ட் ஆகியவைகளை வழங்குகிறது. குறிப்பாக முதல் 240 நாட்கள் வரை மட்டுமே லோக்தூம் சேவை இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL launches 'world's first' satellite-based narrowband-IoT network: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X