Home
News

குவியுது கூட்டம் BSNL பார்த்து.. ரூ.259 க்கு TV சேனல் உடன் ஸ்பெஷல் பிராட்பேண்ட் பிளான்.. டேட்டா, ஸ்பீட் என்ன?

இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.259 க்கு புதிய பிராட்பேண்ட் (Broadband) திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும், மிகவும் பேஸிக் ஆன பிராட்பேண்ட் பிளான் கூட மாதத்திற்கு குறைந்தது ரூ.400 வரை செலவாகும் சூழ்நிலையில் இது வந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.259 விலையில் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவு விலையிலான சலுகைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதும், அவர்களை தக்கவைத்துக்கொள்வதுமே இந்த திட்டத்தின் மற்றும் பிஎஸ்என்எல்-ன் முக்கிய நோக்கமாகும்.

BSNL.. ரூ.259 க்கு TV சேனல் உடன் ஸ்பெஷல் பிராட்பேண்ட் பிளான்!

பிஎஸ்என்எல்-இன் ரூ.259 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.259 பிராட்பேண்ட் திட்டம் நாட்டின் குறிப்பிட்ட நகரங்கள் அல்லது பகுதிகளில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தில் 700ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. அத்துடன், பயனர்களுக்கு 25 எம்பிபிஎஸ் வேகமே கிடைக்கிறது.

வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (voice calls) மற்றும் பிரசார் பாரதி டிவி (Prasar Bharti TV),வேவ்ஸ் ஆப் (Waves App), பிஎஸ்என்எல் ஸ்கைப்ரோ ஐஎப்டிவி (BSNL Skypro IFTV) ஆகியவற்றின் மூலம் இலவச டிவி சேனல்களை பார்க்கும் வசதியும் இத்திட்டத்தில் அடங்கும். இது நிறுவனத்தின் ஒரு சிறப்பு கிராமப்புற பிராட்பேண்ட் திட்டமாகும். ஆனாலும் இது அனைத்து கிராமப்புற நகரங்களிலும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

இது மலிவானது என்றாலும், இதில் குறைவான டேட்டா மற்றும் இண்டர்நெட் வேகமே கிடைக்கிறது. இருப்பினும், வீடு அல்லது அலுவலகத்தில், இண்டர்நெட் கனெக்ஷனிற்கான குறைந்த பட்ஜெட்டை கொண்டவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செலவிட முடிந்தால், பிஎஸ்என்எல்-இன் ரூ. 449 பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். இதுவும் ஒரு சிறந்த தேர்வாகும். ஒப்பிட்டு பார்க்கையில், இத்திட்டமும் கூட பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டிலேயே உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம் 50 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகிறது. இதனுடன், பயனர்களுக்கு மாதந்தோறும் 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், இதில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் (Unlimited voice calling) நன்மையையும் உள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனம் இத்திட்டத்தை பைபர் பேசிக் நியோ (Fiber Basic Neo) திட்டம் என்று அழைக்கிறது. இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்காமல் போகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதியில் இந்த திட்டம் கிடைத்தால் - நீங்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்டின் கீழ் இருந்தால், இருக்க விரும்பினால் இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

பிஎஸ்என்எல்-இன் ரூ.449 திட்டத்தை பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL Self Care) ஆப் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம். ரூ.449 திட்டம் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு சிறந்த சிக்கனமான தேர்வாகும். பல டிவைஸ்களை இணைத்து பயன்படுத்தினாலும், இதன் 50 எம்பிபிஎஸ் வேகம் போதுமானதாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ஃபைபர் (Fiber) சேவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. புதிய இணைப்பை பெற அல்லது அதுகுறித்த விவரங்களை அறிய, உங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தையும் நீங்கள் அணுகலாம். நாட்டின் சில பகுதிகளில் பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது; இதன்படி, பிராட்பேண்ட் இணைப்புக்கான நிறுவல் கட்டணம் (installation charge) பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இலவச ரவுட்டர் (router) அமைப்பும் அடங்கும். பயனர்கள் திட்டத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்; மற்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
BSNL Announced New Special broadband plan For Rs 259 With 700GB Data 25Mbps Speed and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X